கேப்டனாக கோலியால் கூட செய்ய முடியாததை செய்து காட்டிய ஹிட்மேன் ரோஹித் சர்மா – புதிய சாதனை

Rohith-1
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதியன்று துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அந்த 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

Pooran

- Advertisement -

அதை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஒருநாள் தொடரை போலவே முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என தொடரை முன்கூட்டியே கைப்பற்றியது. அந்த நிலையில் இந்தத் தொடரின் 3-வது மற்றும் கடைசி சம்பிரதாய போட்டி நேற்று கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு துவங்கியது.

மீண்டும் மிரட்டிய இந்தியா:
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு நீண்ட நாட்களுக்குப்பின் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 34 (31) ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 25 (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானதால் இந்தியாவிற்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டது.

Thakur

இதனால் 13.5 ஓவர்களில் 93/4 என தடுமாறிய இந்தியாவை சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து தூக்கி நிறுத்தினார்கள். வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை கடைசி நேரத்தில் பந்தாடிய இந்த ஜோடியில் சூரியகுமார் யாதவ் வெறும் 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 35* ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 184 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

மற்றுமொரு வைட்வாஷ் வெற்றி:
இதை தொடர்ந்து 185 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க கைல் மேயர்ஸ் 6, ஹோப் 8 சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்கள். இருப்பினும் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் முதல் 2 போட்டிகளைப் போலவே மீண்டும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து வந்தார்கள்.

indvswi

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 167/9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டது. ஒருநாள் தொடரை போலவே இந்த டி20 தொடரிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி மற்றுமொரு ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்று சொந்த மண்ணில் கில்லி என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

- Advertisement -

ரோஹித் சாதனை :
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இந்திய வெள்ளைப்பந்து அணியின் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரின் போது காயத்தால் விலகியதால் இந்தியா படு மோசமான வைட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அந்த வேளையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயத்தில் இருந்து திரும்பிய அவர் தனது அபாரமான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து இந்தியாவை வெற்றி பாதைக்கு திரும்ப வைத்துள்ளார் என்றே கூறலாம்.

Rohith

இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இந்த டி20 தொடரில் ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சூப்பர் சாதனையை படைத்துள்ளார். இத்தனைக்கும் அவர் கேப்டனாக செயல்பட்ட குறுகிய காலத்திலேயே இந்த சாதனையை படைத்துள்ளது உண்மையாகவே அவரின் திறமையை காட்டுகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஒயிட்வாஷ்  வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன்கள் இதோ:
1. ரோஹித் சர்மா : 4 வைட்வாஷ் வெற்றிகள்
2. விராட் கோலி : 2 வைட்வாஷ் வெற்றிகள்
3. எம்எஸ் தோனி : 1 வைட் வாஷ் வெற்றி

நம்பர் ஒன் டி20 டீம் இந்தியா:
இது மட்டுமல்லாமல் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் சர்வதேச டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசை பட்டியலில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெஸ்ட்இண்டீஸ் தொடர் மட்டுமல்லாது கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரையும் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

Rohith

அதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக நீண்ட நாட்களாக ஜொலித்து வந்த இங்கிலாந்தை முந்திய இந்தியா தற்போது புதிய நம்பர் ஒன் டி20 அணியாக உருவெடுத்தது சாதித்துள்ளது. இந்த வெற்றியில் புதிதாக தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் பங்கும் நிறைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இப்படி வெற்றிமேல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் ரோகித் சர்மா வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்தியாவிற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement