
அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கைப்பற்றி இரண்டாவது முறையாக கோப்பை பற்றி அசத்தியது. அதன் பின்னர் இந்திய அணியின் வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் அவர்களுக்கு மிகச்சிறந்த வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவர்கள் இந்தியா வந்தடைந்தனர். அந்த வகையில் நேற்று காலை மும்பை வந்து தரையிறங்கிய இந்திய அணிக்கு மிகச்சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் மும்பை விஸ்தாரா விமான நிலையத்தில் இந்திய அணி தரை இறங்கும்போது வாட்டர் கேனான் சல்யூட் வரவேற்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய பின்னர் விமானத்தின் இரு பக்கங்களிலும் இருந்தும் தண்ணீர் பீச்சு அடிக்கப்படும்.
இப்படி ஒரு மரியாதை இந்திய அணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு விமானி ஓய்வு பெறும் போது அவர்கள் சேவையை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக இந்த நடைமுறை வழங்கப்படும். மேலும் பெரிய நாட்டு தலைவர்கள் விமானம் தர இயங்கும்போதும் இந்த மரியாதை வழங்கப்படும்.
அப்படி ஒரு மரியாதையை தான் தற்போது டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ வழங்கியுள்ளது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய இந்திய அணியின் வீரர்கள் பிரதமர் மோடியுடன் ஒரு சிறப்பு விருந்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : அதுக்கு சச்சின் மட்டுமே தகுதியானவர்.. 15 வருசத்துல பாக்குறேன்.. ரோஹித்தும் நானும் அழுதுட்டோம்.. கோலி பேட்டி
அதோடு மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்காக ஒரு பிரத்யேக நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்திய அணியின் வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.