ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஜூலை 12-ம் தேதி முதல் துவங்குகிறது.
அதை தொடர்ந்து ஜூலை மாதம் இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கு அடுத்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான அணிகளை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த வேளையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியை மட்டும் அறிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா முகமது ஷமி, முகமது சிராஜ் என அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான 15 பேர் கொண்ட இளம் இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டினை தொடர்ந்து கார் விபத்தில் சிக்கிய பிரபல இந்திய வீரர் – அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய சம்பவம்
1) இஷான் கிஷன், 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) திலக் வர்மா, 5) சூரியகுமார் யாதவ், 6) சஞ்சு சாம்சன், 7) ஹார்டிக் பாண்டியா, 8) அக்சர் படேல், 9) யுஸ்வேந்திர சாஹல், 10) குல்தீப் யாதவ், 11) ரவி பிஷ்னாய், 12) அர்ஷ்தீப் சிங், 13) உம்ரான் மாலிக், 14) ஆவேச கான், 15) முகேஷ் குமார்.