இந்திய அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த ஒருநாள் அணி இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்திய அணி கடந்த 50 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. பல்வேறு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி உள்ளது. தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. அப்படிப்பட்ட உலக கோப்பைகளை வென்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஒருநாள் வீரர்களை தற்போது பார்ப்போம்.

2011-final

- Advertisement -

இந்த மிகச்சிறந்த ஒருநாள் அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகிய இருவரும் இணைந்து இந்திய அணிக்காக கிட்டதட்ட 6 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளனர். இருவருமே மிகச்சிறந்த அதிரடியாக ஆடும் வல்லமை கொண்டவர்கள்.

மூன்றாவது இடத்திற்கு விராட் கோலியை தேர்வு செய்யலாம் ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட தற்போது வரை 60 என்ற சராசரி வைத்திருக்கிறார். 11,867 ரன்கள் குவித்து விட்டார்.
நான்காவது இடத்திற்கு ராகுல் டிராவிட் ஆடுவார். பிரச்சினைக்குரிய இந்த இடத்தில் அவர் சரியாக ஆடுவார் என்று தெரிகிறது ஏனெனில் அந்த இடத்தில் விளையாடி இவர் 10.889 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dravid

ஐந்தாவது இடத்திற்கு ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் களமிறங்குவார். இடது கை பேட்டிங், இடது கை சுழற்பந்து வீச்சு இவரிடம் உள்ளது. சரியாக விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கபில்தேவ் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்கள் இடது கை ஜாகிர் கான் வலது கை ஜஸ்பிரித் பும்ரா இந்த அணியில் இடம்பெறுவார்கள். இதுவே தலைசிறந்த ஒருநாள் அணியாக பார்க்கப்படுகிறது. இதோ முழு வீரர்கள் கொண்ட அணி :

Bumrah-2

சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், விராட் கோலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் மகேந்திர சிங் தோனி, கபில் தேவ், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜாஹிர் கான், ஜஸ்பிரித் பும்ரா

Advertisement