2023 ஆண்டுக்கான உலகக்கோப்பை அணி இதுவாகத்தான் இருக்கும். உத்தேச அணி – வீரர்களின் விவரம் இதோ

worldcup

இந்தியாவில் 12 வருடங்கள் கழித்து 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரில் நடக்க இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடக்கும் இந்திய அணி எப்படி கட்டமைக்கப்படும் என்பது குறித்து பார்ப்போம்.

IND-2

இந்த அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மா இருப்பார். அவருக்கு அப்போது 36 வயது ஆகியிருக்கும். மற்றொரு தொடக்க வீரராக 22 வயதாகும் பிரித்வி ஷா இடம் பெறுவார். இந்த இருவரும் அதிரடியாக விளையாடுவதில் வல்லவர்கள்.

மூன்றாவது இடத்தில் மிகவும் இளம் வீரரான யாஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவார். இவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியின் சிறந்த வீரராக வலம் வருகிறார். நான்காவது இடத்தில் கேப்டனாக இருக்கும் விராட் கோலியும், 5 ஆவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருப்பார்கள். இந்த தொடரிலும் கோலி கேப்டனாக தொடர அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli-2

ஆறாவது இடத்தில் மணிஷ் பாண்டே விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய வருவார்கள். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா கண்டிப்பாக இருப்பார். வேகப்பந்து ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார்.

- Advertisement -

மேலும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற பெரிய வாய்ப்பு இருக்கிறது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.

Chahar-1

2023 ஆம் ஆண்டு உத்தேச அணி : ரோகித் ஷர்மா, பிரித்திவி ஷா, யாஸ்வி ஜெய்ஸ்வால், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ரியான் பராக், தீபக் சாகர்.