நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதன் உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி முதலாவது போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த பிரசித் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமார் இணைக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் இணைவார் என்றும் தெரிகிறது. அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறுயெந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : உம்ரான் மாலிக்கை பிளேயிங் லெவனில் விளையாட வைக்காததுக்கு இதுதான் காரணம் – முரளிதரன் ஓபன்டாக்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எல் ராகுல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) முகேஷ் குமார்.

Advertisement