- Advertisement -
இந்திய கிரிக்கெட்

INDvsWI : இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன் இதுதான் – அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப் போட்டியானது இன்று கொல்கத்தா மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இன்றைக்கு மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது.

ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளதால் இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மூன்றாவது போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டும் ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பதிலாக இரண்டு வீரர்கள் அணியில் இணைவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதே வேளையில் பந்துவீச்சு துறையிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அந்த பணியை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

அதேபோன்று இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் விராட் கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் 3-வது வீரராக விளையாடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இடத்தில் ஆவேஷ் கான் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது மற்றொரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் இடம் பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கு முன்னர் திடீரென ஜோடியாக வெளியேறிய விராட் கோலி, பண்ட் – என்ன நடந்தது?

1) ரோஹித் சர்மா, 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) இஷான் கிஷன், 6) வெங்கடேஷ் ஐயர், 7) ஆவேஷ் கான், 8) புவனேஷ்வர் குமார், 9) ஹர்ஷல் படேல், 10) ரவி பிஷ்னாய், 11) குல்தீப் யாதவ்

- Advertisement -
Published by