இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கு முன்னர் திடீரென ஜோடியாக வெளியேறிய விராட் கோலி, பண்ட் – என்ன நடந்தது?

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிய வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.

venky

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்றாவது t20 போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டும் இந்திய அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறி அவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இப்படி ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இருந்து திடீரென வெளியேற என்ன காரணம் என்பது குறித்த கேள்வியே அதிக அளவில் இருந்து வருகிறது. அதன்படி அவர்கள் இந்த போட்டியில் இருந்து வெளியேற காரணம் யாதெனில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

Pant

இதன்காரணமாக விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த மூன்றாவது டி20 போட்டியிலும் அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்காமல் ஓய்வு எடுக்கவுள்ளனர். அதன் காரணமாகவே இந்திய அணியின் பயோ பபுளிலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

மேலும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மீண்டும் இந்திய அணியில் திரும்ப இருக்கும் இவர்கள் அதற்கு முன்னதாக மன ரீதியில் இலகுவாக வேண்டும் என்பதற்காகவே தற்போது திடீரென அணியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக இன்று மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சவுரவ் குமார். யார் இவர்? – இந்திய அணியில் தேர்வாக என்ன காரணம்?

அவர்கள் இப்படி திடீரென அணியில் இருந்து விலகியதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் வேளையில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது தான் உண்மை என்று இந்திய அணியின் நிர்வாகம் சார்பாகவும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement