3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

IND

- Advertisement -

இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு துவங்கும் வேளையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ராகுல் டிராவிடின் தலைமையின்கீழ் எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் தற்போது இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளதால் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதில் குறிப்பிட்ட மூன்று மாற்றங்கள் யாதெனில் துவக்க வீரராக இருக்கும் பிரித்வி ஷாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக படிக்கல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத சீனியர் வீரரான சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் இஷான் கிசனுக்கு பதிலாக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Samson

மேலும் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை முதல் இரண்டு போட்டிகளிலும் சாஹல் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவருக்கு பதிலாக ராகுல் சாகர் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் சில இந்திய வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

1) தவான், 2) படிக்கல் / கெய்க்வாட், 3) சஞ்சு சாம்சன், 4) மனிஷ் பாண்டே, 5) சூரியகுமார் யாதவ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) தீபக் சாகர், 9) புவனேஷ்வர் குமார், 10) ராகுல் சாகர், 11) குலதீப் யாதவ்

Advertisement