IND vs WI : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – அணியில் ஒரு மாற்றம்

Dhawan-IND-Team
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாட இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IND vs WI Mohammed Siraj India

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரு மாற்றம் மட்டும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பெரும்பாலும் அணியில் மாற்றம் இருக்காது என்று கூறப்படும் நிலையில் முதல் போட்டியின் போது விளையாடிய பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக அறிமுக வீரராக அர்ஷ்தீப் சிங்கிற்கு மட்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று இரவு இந்திய நேரப்படி ஏழு மணிக்கு துவங்குகிறது. அதன்படி இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூத்த வயதில் சதமடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement