ஏமாற்றம் அளித்த ராகுல் டிராவிடின் தேர்வு. தத்தளிக்கும் இந்தியா ? – தவறு நடந்தது எங்கே ?

INDvsSL-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக 5 வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அதேபோன்று மிடில் ஆர்டரில் கிருஷ்ணாப்பா கவுதம் களமிறங்கியுள்ளார்கள்.

sl

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சாளர்களில் சாஹல் மற்றும் குலதீப், புவி, தீபக் சாகர் ஆகியோர் நீக்கப்பட்டு ராகுல் சாகர், சேத்தன் சக்காரியா, சைனி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா ஆகிய ஐவர் களமிறங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் அதிக வீரர்கள் அறிமுக வீரர்களாக இந்தப் போட்டியில்தான் விளையாடி வருகின்றனர்.

ராகுல் டிராவிட் ஏற்கனவே கூறியபடி இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு இந்த போட்டியின் மூலம் வாய்ப்பு அளித்து உள்ளார். அவரின் இந்த முடிவை தற்போது தவறாக மாறி உள்ளது ஏனெனில் 50 ஓவர் நடக்க வேண்டிய இந்த போட்டி மழை காரணமாக 47 அவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் அந்த 47 ஓவர்களையும் முழுமையாக இந்திய அணியால் முடிக்க முடியவில்லை.

dhawan

இறுதியில் இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களையும், சாம்சன் 46 ரன்களும், சூரியகுமார் 40 ரன்களும் குவித்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

இதன் காரணமாக தற்போது இந்திய இலங்கை அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு புதுமுக பந்துவீச்சாளர்களை இந்திய அணி இறக்கிவிட்டு உள்ளதால் தற்போது இந்த சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement