பும்ராவுக்கும், ஷமிக்கும் கட்டுப்பாடு. நடராஜனுக்கு அடித்த ஜாக்பாட் – அணி நிர்வாகம் போட்ட புது பிளான்

Ind
- Advertisement -

இந்திய அணி இரண்டு மாதங்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அடுத்த டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் துவங்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இருக்கப்போகிறது.

INDvsAUS

- Advertisement -

மூன்று வகையான போட்டிகளுக்கு 3 அணியை அறிவித்து உள்ளது. இந்திய அணி இதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற ஒரு சில வீரர்கள் 3 அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் சுழற்சி முறையில் இரண்டு வீரர்களையும் பயன்படுத்தப் போவதாக பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்…

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி ஆகியோர் மூன்று விதமான போட்டிகளிலும் இடம்பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் இருவரையும் முழுமையாகக் களமிறக்குவோம்.

அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தேவைக்கேற்ப களமிறக்கி கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார். சிட்னியில் தற்போது இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முகமது சமி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்துகளை கொண்டு பயிற்சி செய்து வருகிறார்.

Nattu

இதனை வைத்து இவர் முதல் டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக ஆடுவார் என்று தெரியவந்திருக்கிறது. டி20 போட்டிகளில் தீபக் சஹர், நவதீப் சைனி, தங்கராசு நடராஜன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த மட்டுமே பெரிய வாய்ப்பு இருக்கிறது. இதனால் டி20 போட்டியில் நடராஜன் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Advertisement