இந்திய அணிக்குள் பிளவு. ரவி சாஸ்திரி மற்றும் கோலியின் முடிவால் புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களின் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும், துணை கேப்டன் ரோகித் ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று கோலி கேப்டன்ஷிப்பில் இருந்து மாற்றி அதற்கு பதிலாக ரோகித் சர்மாவை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளதாக தெரிகிறது.

இந்தியில் வெளிவரும் ஒரு நாளேடு இந்திய அணிக்குள் பிளவு இருப்பதை செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஒன்று சேர்ந்து முடிவுகளை எடுக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதால் போட்டி முடிவுகள் தவறாக போகின்றது என்றும், உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து மோசமாக தோற்றத்துக்கு மிகப்பெரிய காரணம் கோலி மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோரின் மாறுபட்ட சிந்தனை தான் என்றும் கூறியுள்ளது.

Kohli

ரவி சாஸ்திரியும் விராட் கோலியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை மட்டும் தேர்வு செய்கிறார்கள். மற்றபடி யாருடனும் கலந்து ஆலோசித்தது இல்லை இவர்களை எதிர்த்து செயல்பட்டால் அணியில் இடம் கிடைப்பது கடினம் ஆகிவிடும் என்றும் அதிலும் குறிப்பிடபட்ட்டுள்ளது.

- Advertisement -

rohith

விராட் கோலி தன்னுடைய பேச்சை கேட்டு நடக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை தருகிறார் என்றும் ரோகித் சர்மா கூறினால் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.ராயுடு, ஐயர், கில், மனிஷ் பாண்டே போன்ற பேட்ஸ்மேன்களை நடுவரிசையில் கொண்டு வர முடியும் ஆனால் அவர்களில் ஒருவரைக் கூட கோலி தேர்வு செய்யவில்லை.

pandya

அதிலும் குறிப்பாக நான்காவதாக சங்கரை தேர்வு செய்ததில் கடும் போட்டி இருந்தது. இது கோலியின் ஒரு ஒருதலைப்பட்ச முடிவாக அமைந்தது. ராகுல் உலகக்கோப்பை முன்பு சரியாக ஆடாவிட்டாலும் உலக கோப்பையில் கோலியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல சாகல் பெங்களூர் அணியில் இருப்பதால் அவரையும் கோலி தொடர்ந்து தக்க வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement