IND vs IRE : 2 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு – அணியில் 3 மாற்றங்கள்

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது t20 போட்டி இன்று டப்ளின் நகரில் சற்று நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது.

IND vs IRE

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தற்போது பேட்டிங்கிற்கு தயாராகி வரும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாசுக்கு பிறகு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி டாஸிற்கு பிறகு அவர் பேசுகையில் : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விருப்பப்படுகிறோம். ஏனெனில் இந்த மைதானம் மற்றும் சூழ்நிலை ஆகியவை தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் இந்த மைதானத்தில் எங்களால் நல்ல ஸ்கோர் அடிக்க முடியும். அதோடு நல்ல இலக்கை நாங்கள் செட் செய்தால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அவர்களை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்.

Indian Team

இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்களை செய்துள்ளோம். அதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுகிறார். அதே போன்று ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷல் பட்டேலும், சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னாயும் விளையாடுகிறார்கள் என்று பாண்டியா அறிவித்தார். இதன் காரணமாக இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஷ்தீப் சிங்கிற்கு இன்றும் அறிமுக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்றைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அர்ப்பணிப்பின் அடையாளம், விடைபெற்றார் இங்கிலாந்தின் வெள்ளி நாயகன் இயன் மோர்கன் – ரசிகர்கள் சோகத்துடன் வாழ்த்து

1) இஷான் கிஷன், 2) சஞ்சு சாம்சன், 3) தீபக் ஹூடா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) புவனேஷ்வர் குமார், 9) ஹர்ஷல் படேல், 10) ரவி பிஷ்னாய், 11) உம்ரான் மாலிக்

Advertisement