
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்களுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரேல் ஆகியாருடன் களமிறங்கியது. அதேபோன்று பெர்த் நகரில் நடைபெற்ற அந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இடம் கிடைக்காமல் போனது முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது.
அதற்கு அடுத்து அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அணிக்கு திரும்பியதால் தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதோடு கடந்த பல ஆண்டுகளாக துவக்க வீரராக விளையாடி வந்த ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தார். அதன் காரணமாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. அதுதவிர்த்து வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.
இப்படி சில மாற்றங்கள் நடந்தாலும் இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் நிச்சயம் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இந்த முக்கிய இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தான் விளையாடிய அனைத்து போட்டிகளுமே தனது மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இனிமே முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பே இல்ல.. வெளியான அறிவிப்பு – விவரம் இதோ
இதன் காரணமாக அவர் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேபோன்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக பேட்டிங்கில் கூடுதலாக பங்களிப்பை வழங்கும் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் கொண்டுவர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் பிளேயிங் லெவனில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.