ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அடிலெய்டு நகரில் இரண்டாவதாக நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி மோசமான தோல்வியை சந்தித்தது.
முற்றிலுமாக அணியில் இருந்து வெளியேறிய முகமது ஷமி :
இதன் காரணமாக தற்போது எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் இந்திய அணி குறைந்தது இரண்டு ஆட்டங்களிலாவது வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான வீரராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே திகழ்ந்து வருகிறார்.
அவரது பந்துவீச்சு தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மைதான். ஏனெனில் இந்த தொடரில் பும்ராவை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் சற்று கூடுதலான தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமெனில் பும்ராவின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதேவேளையில் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இணையாமல் இருந்த முகமது ஷமி காயத்திலிருந்து தற்போது முழுமையாக மீண்டுவிட்டார். அதுதவிர்த்து உள்ளூர் தொடரான ரஞ்சி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அவர் விளையாடி வந்தார்.
எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள தொடரில் அவர் இந்திய அணியுடன் இணைவார் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டி நாளை துவங்கவுள்ள நிலையில் இன்னும் அவர் ஆஸ்திரேலியா பயணிக்கவில்லை. அதோடு தற்போது வெளியான அறிவிப்பின்படி : கூடுதலாக முகமது ஷமி இந்தியாவில் அடுத்ததாக டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை நடைபெற இருக்கும் விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன்னரே அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலிய அணி – விவரம் இதோ
இதன் காரணமாக அவர் அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியிடும் விளையாட வாய்ப்பு இல்லை எனவே முகமது ஷமி இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான எஞ்சியுள்ள தொடரில் இருந்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



