IND vs AUS : 4 ஆவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் – என்ன நடக்கும் தெரியுமா?

IND vs AUS
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ளதால் இந்திய அணி தற்போது ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிகட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே நிலவி வருகிறது.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியை வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதே வேளையில் இந்த மூன்றாவது போட்டியில் தோற்ற இந்திய அணி தற்போது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெறும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வென்ற பிறகு இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் தற்போது மூன்றாவது போட்டியில் 9 விக்கெட் என்ற பெரிய வித்தியாசத்தில் படுதோல்வி இந்திய அணி சந்தித்துள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை தனக்குத்தானே கடினமாக்கி உள்ளது. இந்த ஆஸ்திரேலிய தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் இறுதி போட்டியில் நேரடியாக நுழைந்து விடும்.

IND vs AUS Indore Pitch

ஒருவேளை இந்திய அணி கடைசி 4 ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலை அடைந்தால் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் விளையாடும் தொடரின் முடிவுகளை வைத்தே இந்திய அணியின் வாய்ப்பு கணிக்கப்படும். ஒருவேளை இலங்கை அணி நியூசிலாந்து அணியை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வீழ்த்தி விட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணியே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள்.

- Advertisement -

ஆனால் அவர்கள் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியாமல் போனால் இந்திய அணிக்கு தான் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசிப் போட்டி டிராவானால் நிச்சயம் இந்திய அணியின் புள்ளிகள் ஓரளவு குறையும். அதன்பிறகு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ளப்போவது இந்தியாவா? அல்லது இலங்கையா? என்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs AUS : பணம் தான் முக்கியமா? ஹர்டிக் பாண்டியா ஏன் டெஸ்ட் அணியில் விளையாடல – முன்னாள் ஆஸி கேப்டன் கேள்வி

இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே போதுமான ஒன்று. கடைசி போட்டியில் மட்டும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி விட்டால் இலங்கையை தொடரை பற்றி நாம் யோசிக்கக்கூட தேவையில்லை. இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெறும். ஒருவேளை இந்திய அணி தோற்றால் மேலும் சிக்கலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement