IND vs AUS : பணம் தான் முக்கியமா? ஹர்டிக் பாண்டியா ஏன் டெஸ்ட் அணியில் விளையாடல – முன்னாள் ஆஸி கேப்டன் கேள்வி

Pandya
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பை தக்க வைத்த இந்தியா 3வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட ஆஸ்திரேலியா பட் கமின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகியதால் 4 – 0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா இந்தூரில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவை 109, 163 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

Cameron Green

- Advertisement -

அதனால் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வெற்றியை ஆஸ்திரேலியா பெறுவதற்கு இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் வருகை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அவரைப் போன்ற ஆல் ரவுண்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் துறைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி சிறந்த 11 பேர் அணியுடன் விளையாடி வெற்றி காண்பதற்கு முக்கிய பங்காற்றியது. ஆனால் இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல் என 3 ஸ்பின்னர்களும் ஆல் ரவுண்டர்களாக இருந்தாலும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

இயன் சேப்பல் கேள்வி:
அந்த இடத்தில் 2018இல் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அசத்திய ஹர்டிக் பாண்டியா 2019 உலகக் கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்து வீச முடியாமல் தடுமாறினார். குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் மோசமாக செயல்பட்டதால் அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று மீண்டும் மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

Pandya

ஆனால் டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசுவதற்கே தடுமாறுவதால் 5 நாட்கள் நடைபெறக்கூடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொண்டு நம்மால் அசத்த முடியாது என்ற எண்ணத்தை கொண்டுள்ள அவர் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான ஆர்வத்தையும் காட்டவில்லை அதற்கான பயிற்சிகளையும் எடுக்கவில்லை. சொல்லப்போனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடி ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருப்பதால் பல கோடிகளை சம்பாதிக்கும் பாண்டியா “முதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முழுமையாக விளையாடுகிறேன். பின்னர் டெஸ்ட் போட்டிகளைப் பற்றி பார்க்கலாம்” என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அப்படி ஆர்வமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணிக்க துவங்கியுள்ள அவர் இனிமேல் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹர்டிக் பாண்டியா இந்திய டெஸ்ட் அணியில் அவசியம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் அவர் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணிக்கிறார் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். குறிப்பாக அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச முடியாது என யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பும் அவர் பணத்துக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டும் போதுமா என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Ian Chappell Rohit Sharma

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் ஏன் ஹர்திக் பாண்டியா இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலர் அவரால் இந்தளவுக்கு பந்து வீச முடியாது என்று என்னிடம் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் நீங்கள் மருத்துவ குழுவினரின் பேச்சு கேட்பீர்களா? அல்லது கிரிக்கெட் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சை கேட்பீர்களா? என்னை கேட்டால் பாண்டியா விளையாட விரும்பினால் அவர் நிச்சயமாக இந்திய அணியில் இருப்பார்”

இதையும் படிங்க:IND vs AUS : இந்தூர் மாதிரி மைதானத்தில் அவரோட பேட்டிங் தான் கரெக்ட் – பாராட்டிய ரோஹித் சர்மா

“நல்ல பேட்ஸ்மேனான அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். மிகச் சிறந்த ஃபீல்டர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீன் சமநிலையை ஏற்படுத்துவது போல் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா அவசியமாகிறார்” என்று கூறினார்.

Advertisement