தம்பி நீ வெயிட்ட கம்மி பண்ற வரைக்கும் இந்திய அணியில வாய்ப்பே கிடைக்காது – இளம் வீரரை எச்சரித்த தேர்வுக்குழு

Shaw-1
- Advertisement -

ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் பல முன்னணி வீரர்களுக்கு இடம் கிடைத்தாலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரின் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு பறிபோனது. 20 பேர் கொண்ட இந்திய அணியில் மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய துவக்க வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் ப்ரித்வி ஷாவிற்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 21 வயதான பிரித்வி ஷா ஏற்கனவே இந்திய அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் அதன் பின்னர் அவரின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட அவர் இடைஇடையே அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம் பிடித்த அவரது ஆட்டம் மோசமாக இருந்த காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Shaw

இந்த ஐபிஎல் தொடரிலும் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் பிரித்வி ஷாவை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பது குறித்து இந்திய தேர்வு குழு உறுப்பினர்கள் சில விளக்கத்தை கொடுத்துள்ளனர்.

shaw-2

அதன்படி தற்போது 21 வயதாகும் பிரித்வி ஷா சற்று கூடுதல் எடையுடன் இருப்பதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் நாட்களில் அவர் உடல் எடையை கணிசமாக குறைத்தாக வேண்டும் அப்படியில்லையென்றால் அவர் அணிக்கு திரும்புவது பற்றி யோசிக்கவே கூடாது என்பது போன்ற கருத்துக்களை வெளிப்படையாக தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement