- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் டெஸ்டில் வாய்ப்பை கொடுத்த வங்கதேசம்.. ஆஸி தொடருக்காக ரோஹித் மாற்றம்.. இந்திய பிளேயிங் லெவன்

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் காலை 9.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சென்னை மைதானத்தில் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிகமாக வென்றுள்ளன. அது போன்ற சூழ்நிலையை கவனிக்க தவறிய வங்கதேசம் முதலில் இந்தியாவுக்கு பேட்டிங் செய்யும் நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்றே சொல்லலாம். மறுபுறம் இந்திய அணியில் 2 ஸ்பின்னர்கள் மட்டுமே விளையாடுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

ஆஸி தொடருக்காக:

பொதுவாக இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய 3 ஸ்பின்னர்கள் விளையாடுவது வழக்கமாகும். ஆனால் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் முனைப்புடன் இப்போதே கேப்டன் ரோகித் சர்மா 2 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் முடிவை எடுத்துள்ளார்.

சென்னை பிட்ச்சும் ஆரம்பத்தில் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த 2 ஸ்பின்னர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வாகியுள்ளனர். அதேபோல வேகப்பந்து வீச்சு துறையில் பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மற்ற படி கேஎல் ராகுல், ரிசப் பண்ட் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுகின்றனர். இது பற்றி கேப்டன் ரோஹித் சர்மா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய அணி:

“நாங்களும் முதலில் பவுலிங் செய்திருப்போம். பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. இதற்கு நாங்கள் நன்றாக தயாராகியுள்ளதால் எங்களுக்கு தெரிந்த வழியில் விளையாட வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக அடுத்த நடைபெறும் 10 போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால் தற்போது முன்னே இருப்பதில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சென்னைக்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்து நாங்கள் பயிற்சிகளை எடுத்தோம்”

இதையும் படிங்க: பஸ்பால் ஜெய்க்கவே முடியாது.. இது தான் இந்தியாவின் வேற லெவல் ஸ்டைல்.. இங்கிலாந்துக்கு கம்பீர் பதிலடி

“எனவே எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பும்ரா, ஆகாஷ், சிராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள் விளையாடுகின்றனர்” என்று கூறினார். இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்

- Advertisement -