நேற்றைய போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் – காரணம் இதுதான்

toss
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ind 3

- Advertisement -

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும் தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர். இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்பு நிற பட்டை தங்களது கைகளில் அணிந்து விளையாடினர். அதற்கு காரணம் யாதெனில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கும் முன் இந்திய அணியின் முன்னாள் வீரரான நாட்கர்ணி என்பவர் இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

Nadkarni

87 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளரான நாட்கர்ணி இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1414 ரன்களையும் 88 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement