இந்திய அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடிவிட்டு காணாமல் போன வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rahul-Chahar
- Advertisement -

இந்திய அணி தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் 296 வீரர்களையும், ஒருநாள் போட்டிகளில் 560 வீரர்களையும், டி20 போட்டிகளில் 140 வீரர்களையும் ஆட வைத்துள்ளது. இப்படி நூற்றுக் கணக்கில் வீரர்களை ஆட வைத்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள வீரர்கள் மட்டுமே நிலைத்து நின்று 10 வருடங்களுக்கு மேல் ஆடியுள்ளனர். தற்போது இந்திய அணிக்காக தேர்வாகி ஒரே ஒரு போட்டியில் ஆடி விட்டு அதன் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்காத 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்

Arvind

- Advertisement -

ஸ்ரீநாத் அரவிந்த் :

உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமாக ஆடி அதற்காக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே இவர் பந்து வீசினார். அதிலும் 3.4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக அதன் பின்னர் இவரை இந்திய அணி சேர்க்கவே இல்லை.

Nadeem-1

சபாஷ் நதீம் :

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானாக பார்க்கப்படும். இவர் 2016ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதன்காரணமாக 2019ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. குல்தீப் யாதவ் இற்கு பதிலாக விளையாடினார். அந்த போட்டியில் 4 விக்கெட் எடுத்தாலும் அதன் பின்னர் அவரை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அணியில் களம் இறங்கவில்லை.

Rahul-Chahar

ராகுல் சாகர் :

- Advertisement -

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான தீபக் சாகரின் தம்பி ஆவார். இவர் சுழற்பந்து வீச்சாளர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 20 விக்கெட் வீழ்த்தியதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கொடுக்கப்பட்டது. அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

Markande

மயாங்க் மார்க்கண்டே :

- Advertisement -

இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் ஆடியதன் மூலம் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 31 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. தற்போது வரை இவரால் மீண்டும் இந்திய அணிக்குள் வரமுடியவில்லை.

Fazal

பைஸ் பைசல் :

இவர் உள்ளூர் போட்டிகளில் பேட்டிங் ஜாம்பவானாக திகழ்ந்தவர். 2016ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. அட்டகாசமாக 55 ரன்கள் எடுத்தார். இடதுகை வீரரான இவருக்கு இடம் கிடைக்கவில்லை ஏனெனில் இவர் துவக்க வீரர்.

Advertisement