- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் டாப் 10-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் – பக்கா மாஸ்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு இடையே மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அண்மையில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நிறைவடைந்த கையோடு புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

தரவரிசை பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் :

அந்த வகையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இந்திய அணியின் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி, மூன்று சிக்சர் என 76 ரன்கள் குவித்திருந்த வேளையில் அவர் தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி டாப் 10-ல் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

அதேபோன்று இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு அனுபவ நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்திலும், இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

அது தவிர்த்து இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் சுப்மன் கில் மிகச் சிறப்பான பார்மை தொடர்ந்து வருவதால் அவர் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

இதையும் படிங்க : ஒரே போட்டோவை போட்டு இந்திய அளவில் சாதனை நிகழ்த்திய ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

அதேவேளையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருதினை வென்ற நியூஸிலாந்து அணியின் துவக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். இப்படி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நான்கு வீரர்கள் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -