ஒரே போட்டோவை போட்டு இந்திய அளவில் சாதனை நிகழ்த்திய ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

Hardik
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளில் இருந்து 254 ரன்கள் குவித்தது.

ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை :

இதன் மூலம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடைசியாக 2013-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றிய வேளையில் அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த வெற்றி இந்திய ரசிகர் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மைதானத்தில் பெரிய அளவில் மகிழ்ந்து கொண்டாடினர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அவரது ஸ்டைலில் இந்த கோப்பையை கொண்டாடினார்.

அதாவது பிட்ச்சின் மத்தியில் கோப்பையை வைத்து இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல அவர் ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது இதே போன்ற தனித்துவமான போஸ் கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதே மாதிரி இம்முறையும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அப்படி அவர் பதிவிட்டிருந்த இந்த புகைப்படம் தான் தற்போது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. அதாவது நேற்று அவர் பதிவிட்ட அந்த புகைப்படமானது வெறும் 6 நிமிடத்திலேயே ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று அதிவேகமாக ஒரு லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற சாதனையை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : ரோஹித் கிடையாது.. அவர்தான் கேப்டன்.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த – ஐ.சி.சி

அவரது அந்த புகைப்படமானது தற்போது வரை 16 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அவர் ஒருவேளை ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்த கேப்டனுக்கான ரேஸிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement