ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து 3 பேர் காயத்தால் தான் விலகியுள்ளனர் – பி.சி.சி.ஐ தகவல்

IND
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணித்தேர்வில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலுமே எழுந்த வேளையில் இந்த அணித்தேர்வு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக அணிக்கு திரும்பி உள்ளார். அதோடு முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இவர்கள் இருவரும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்ததால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இளம் வீரர்கள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் முக்கியமான சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளதாக பிசிசிஐ தகவலை பகிர்ந்துள்ளது. அந்த வகையில் :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய மூவரும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அணித்தேர்வில் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்டாலும் அவர்கள் காயம் காரணமாக மட்டுமே இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர்கள் மூவருமே முழு உடற்தகுதியுடன் இருந்திருந்தால் நிச்சயம் இந்த அணியில் இடம் பிடித்திருப்பார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : என்னோட கரியர்ல என்னை கஷ்டப்படுத்திய ஒரே பேட்ஸ்மேன்.. அந்த இந்திய வீரர் மட்டும் தான் – முரளிதரன் வெளிப்படை

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி பறிகொடுத்த வேளையில் அடுத்ததாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை குறி வைத்துள்ளதால் நிச்சயம் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதி.

Advertisement