கார் விபத்தில் சிக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்…தலையில் பலத்த காயம்…ரோகித் சர்மா ஆறுதல் !

sharma
- Advertisement -

சமீபத்தில் தான் முகமது சமியை பற்றி அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார்.இதன்காரணமாக முகமது சமியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துசெய்த கிரிக்கெட் நிர்வாகம் விரைவில் குடும்ப பிரச்சனைகளை முடித்துவிட்டு அணிக்கு திரும்பும்படி சொல்லி அனுப்பிவிட்டது.
Shami

அந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் முகமது சமி டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.இந்நிலையில் ரோகித்சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்கள் விரைவில் நலம்பெற்று மீண்டுவர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ரோகித்சர்மாவும் முகமது சமியும் நீண்ட நாள் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித்சர்மா தனது டிவீட்டில் சமீபகாலங்களாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் முகமது சமி விரைவில் மீண்டுவர வாழ்த்துகள் என்று எழுதியுள்ளார்.

இதற்கு முன்னதாக முகமது சமியின் மனைவி அளித்த புகாரின் மீது காவல்துறை விசாரித்து சமி மீது பல்வேறு வழக்குகளை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement