இந்திய வீரரை மிரட்டிய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ அதிரடி – ரசிகர்கள் பாராட்டு

IND
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் வருங்காலத்தை வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது செட்டேஸ்வர் புஜரா, அஜின்கியா ரகானே, இசாந்த் சர்மா மற்றும் ரித்திமான் சாஹா ஆகிய 4 மூத்த வீரர்களை இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. இந்த 4 வீரர்களுமே 35 வயதைக் கடந்து விட்ட காரணத்தாலும் சமீப காலங்களில் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வரும் காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டால் கூட இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடையாது என்று இந்திய தேர்வு குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.

saha

- Advertisement -

சர்ச்சையான சஹா:
அதிலும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட் போட்டிகளில் சக்கை போடு போட்டு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். அதிலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த அவர் இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் எனப்படும் எம்எஸ் தோனியையே மிஞ்சும் அளவுக்கு அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

அதன் காரணமாக சமீப காலங்களில் பெஞ்சில் அமர்ந்து வந்த மூத்த விக்கெட் கீப்பரான தமக்கு இனிமேல் எப்போதுமே வாய்ப்பு கிடையாது என்று இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்ததாக இலங்கை தொடருக்கு முன்பாக சகா வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். அந்த நிலைமையில் அதுபற்றி பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் தம்மைத் தொடர்பு கொண்டதாக தெரிவித்த அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் கோபமடைந்த அந்த பத்திரிக்கையாளர் தம்மை மிரட்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டினார்.

Saha

அதற்கு ஆதாரமாக “என்னுடைய அழைப்பை ஏற்கவில்லை. இனிமேல் உன்னை எப்போதும் பேட்டி எடுக்க மாட்டேன். இந்த அவமானத்தை மறக்கவும் மாட்டேன்” என்று அந்த மர்ம பத்திரிகையாளர் பேசிய உரையாடல் பற்றிய ஸ்க்ரீன் ஷாட்டை தனது டுவிட்டரில் சஹா பதிவிட்டதால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வட்டாரமும் அதிர்ச்சி அடைந்தது. ஏனெனில் நாட்டுக்காக கிரிக்கெட்டில் விளையாடிய ஒருவரை ஒரு சாதாரண பத்திரிகையாளர் மிரட்டுவதா என கொந்தளித்த ரசிகர்கள் அவரின் பெயரை வெளியிடுமாறு சஹாவிடம் கேட்டனர்.

- Advertisement -

போரியா மஜும்தார்:
குறிப்பாக வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் அந்த பத்திரிகையாளரின் பெயரை வெளியிடுமாறு கேட்டனர். ஆனால் அதற்கு மௌனம் காத்த சகா அவரின் பெயரை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். இருப்பினும் இதில் தலையிட்ட பிசிசிஐ சஹாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை விசாரிக்க மூவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

Boria Majumdar Wriddhiman Saha

அதை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய அந்த குழுவிடம் ஒன்று விடாமல் அனைத்தையும் தெரிவித்ததாக கூறிய ரித்திமான் சஃகா அவரின் பெயரை ஊடகத்தில் வெளியிட வேண்டாம் என்று பிசிசிஐ நிர்வாகிகள் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக அன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதுபோல் அன்று இரவே “போரியா மஜும்தார்” எனப்டும் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் தாம் சஹாவை மிரட்டவில்லை என்றும் பேட்டி எடுப்பதற்காக அவரை தொடர்பு கொண்ட விதத்தை அவர் தவறாக சித்தரித்து தனது பெயரையும் புகழையும் கெடுக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டதாக பதில் குற்றம் சாட்டினார்.

- Advertisement -

2 ஆண்டுகள் தடை:
இந்நிலையில் சகாவை மிரட்டும் வகையில் பேசிய போரியா மஜும்தாருக்கு இனிமேல் இந்தியக் கிரிக்கெட் சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்க 2 ஆண்டுகள் பிசிசிஐ தடை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் கிரிக்கெட் அமைப்புகளிடம் அவரை எந்த ஒரு மைதானத்திற்குள்ளேயும் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்”

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் கிடைச்ச பணத்தால தான் அவருக்கும் எனக்கும் பிரன்ட்ஸ்ஷிப்பே போச்சு – சைமண்ட்ஸ் ஓபன்டாக்

“இனிமேல் இந்திய மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஊடகத் துறை சார்பில் அவர் அனுமதிக்கப்பட மாட்டார். அதேபோல் சர்வதேச அளவிலும் அனுமதிக்க வேண்டாம் என்று ஐசிசிக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். மேலும் இனிமேல் அவருடன் எந்த ஒரு இந்திய வீரரும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வஅறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பிசிசிஐயின் இந்த முடிவுக்கு அனைத்து ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement