இந்திய வரலாற்றில் சிறந்த முறையில் கேப்டன் செய்த 5 இந்திய வீரர்கள்..!

greatcaptains
- Advertisement -

இந்திய அணியில் பல்வேறு கேப்டன்கள் இருந்துள்ளனர். கவாஸ்கர் காலம் தொடங்கி இன்று கோலி வரை இந்தியாவுக்கு 33 டெஸ்ட் கேப்டன்கள், 23 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்கள், 5 டி20 போட்டி கேப்டன்கள் என இருந்துள்ளார்கள். ஆனால், இதில் 100 சதவீத வெற்றியை பெற்ற கேப்டன்கள் யார் யார் என்பது தெரியுமா.

anilkumbley

- Advertisement -

அனில் கும்ளே: – 14 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 3 போட்டியில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வி அடிந்திருக்கிறார். ஆனால், ஒரு நாள் போட்டியில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் கேப்டனாக இருந்து அணியை வெற்றி பெற செய்துள்ளார். இதனால் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என்று வந்து விட்டால் கும்ப்ளே 100% வெற்றியை கொடுத்து உள்ளார்.

ரவி சாஸ்திரி :- இந்திய அணியில் 80 டெஸ்ட் மற்றும் 150 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1988 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வீரேந்திர சேவாக்: – இந்திய டி20 அணியின் முதல் கேப்டன் இவர் தான். அதிரடி ஆட்டகாரரான இவர், 2006 ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்ரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது. சேவாக் தலைமையில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

captains

அஜின்கியா ரஹானே:- 2015ஆம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அஜின்கியா ரஹானே இருந்தார். அதே போல சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதிலும் ரஹானே தான் கேப்டனாக செயல்பட்டார்.

captainss

கௌதம் கம்பீர் :- இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரராக இருந்து வந்தவர். இது வரை இந்திய அணி 2010 ஆம் ஆண்டு ஜிம்பாபே அணிக்கு எதிராக விளையாடிய போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வைத்தார். அந்த இத்தொடரில் 5- 0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதே போல மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் இவரது தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisement