கிரிக்கெட்டிற்கு பிறகு உலகில் அதிகம் ரசிகர்களை கொண்ட ஒரு விளையிட்டு என்றால் அது கால்பந்து தான். இந்தியாவில் சில வருடங்களாக கால்பந்து விளையட்டுக்கள் அதிகம் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சர்வேதேச கால் பந்து தொடரில் கென்யா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்திய அணி.
சமீபத்தில் இந்தியாவில் 4 நாடுகள் பங்குபெறும் கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி இந்திய கால்பந்து அணி சீன அணியை 5-0 என்ற கோல் கணக்கில வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய கால்பந்து அணி விளையாடிய இந்த போட்டிக்கு 2000 கும் குறைந்த ரசிகர்களே போட்டியை காண சென்றிருந்தனர்.
இந்நிலையில் இந்திய கால் பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார், அதில் “இந்த தொடரில் ஐரோப்பிய தரம் இல்லை தான் , நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள், எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்தார்.சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்திருந்தார்.
இதையடுத்து இந்த கால் பந்து தொடரின் இறுதி போட்டியில் கென்ய அணியை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி . இந்திய கால் பந்து அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு கால்பந்து ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், ஹர்பஜன் சிங், யூசப் பதான், சுரேஷ் ரெய்னா , ராபின் உத்தப்பா போன்றவர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.