என்னய்யா உங்க நியாயம்? புஜாராவை விட அவர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் – இளம் வீரருக்காக ரசிகர்கள் அதிருப்தி

Pujara
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அத்துடன் முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த வங்கதேசத்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது. முன்னதாக டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 145 ரன்களை சேசிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் 74/7 என்ற நிலையில் சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது 8வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 42* ரன்களும் குவித்து வங்கதேசத்திடம் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றினார்கள். இந்த வெற்றிக்கு மொத்தமாக 6 விக்கெட்டுகளையும் 54 ரன்களை எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தொடர் நாயகனாக மூத்த வீரர் செடேஸ்வரர் புஜாரா அறிவிக்கப்பட்டது நிறைய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

என்னங்க நியாயம்:
பொதுவாக ஒரு சில போட்டிகள் மட்டுமல்லாது அந்த தொடர் முழுவதும் அசத்தலாக செயல்பட்ட வீரருக்குத் தான் தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்படும். அந்த வகையில் இத்தொடரில் 222 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த காரணத்தால் புஜாராவுக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. ஆனால் 90, 102* என 200 ரன்களை முதல் போட்டியில் எடுத்த அவர் 2வது போட்டியில் 24, 6 என சொற்ப ரன்களில் அவுட்டாகி வெற்றியில் முக்கிய பங்காற்றவில்லை.

மறுபுறம் முதல் போட்டியில் 112/4 என இந்தியா தடுமாறிய போது அதே புஜாராவுடன் இணைந்து 86 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2வது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் எடுத்ததுடன் 2வது இன்னிங்ஸில் முக்கியமான 29* ரன்கள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். மொத்தத்தில் இந்த தொடர் முழுவதும் உண்மையாக நாயகனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் எந்த அடிப்படையில் புஜாராவுக்கு அந்த விருதை கொடுத்தீர்கள் என்று சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

ஒருவேளை கடந்த 10 வருடங்களாக நிறைய வெற்றிகளில் பங்காற்றினாலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட புஜாரா கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தலாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்து இத்தொடரில் முதல் முறையாக 3 வருடங்கள் கழித்து சதமடித்து பார்முக்கு திரும்பியுள்ளதால் ஊக்கத்தை கொடுப்பதற்காக விருது வழங்கினீர்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் விளையாட்டில் இது போன்ற நட்சத்திர அந்தஸ்து பார்க்காமல் திறமைக்கு வாய்ப்பும் மதிப்பும் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் புஜாராவை விட இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர் நாயகன் விருது கொடுத்தால் தானே அவரும் உத்வேகமடைந்து வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் புஜாரா இந்த வருடம் இந்த தொடரின் ஒரு போட்டியில் மட்டும் தான் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்கவீடியோ : இவரா நம்மள ஜெயிக்க வெச்சாரு, வெறித்தனமாக கொண்டாடிய அஷ்வின் – வாயை பிளந்து பாராட்டிய டிராவிட், கோலி

ஆனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். அப்படி இத்தொடர் மட்டுமல்லாது இந்த வருடம் முழுவதும் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ரசிகர்கள் இப்படி நட்சத்திர அந்தஸ்து பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள் அப்போது தான் இந்தியா உண்மையான வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் விமர்சிக்கிறார்கள்.

Advertisement