- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்பிட்டல் போனவர அப்படியே டீம்ல இருந்து தூக்கிடுங்க. அப்போதான் இந்தியா ஜெயிக்கும் – கடுப்பாகிய ரசிகர்கள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.

அதன்படி துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் ஆகிய இருவரையும் விரைவிலேயே வீழ்த்திய ஷாகின் அஃப்ரிடி இந்திய அணியின் சரிவை ஆரம்பித்து வைத்தார். பின்னர் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சற்று சுதாரித்து விளையாடி ரன் குவிப்பை மெல்ல மெல்ல அதிகரித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வரை தொடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது பண்ட் ஆட்டமிழந்து வெளியேற ஜடேஜாவும் வெளியேறினார். 7-வது வீரராக அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

- Advertisement -

அவர் இறங்கியபோது முழுவதுமாக இரண்டு ஓவர்கள் கையில் இருந்ததால் நிச்சயம் அவர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பை 160 க்கும் மேல் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டியாவோ 8 பந்துகளில் 2 பவுண்டரி மட்டும் விளாசி 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த மோசமான பேட்டிங் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே பந்துவீசாத அவர் தற்போது பேட்டிங்கிலும் சொதப்பி உள்ளதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேலும் நேற்றைய ஆட்டத்தின் போது முதலில் பேட்டிங் செய்த அவர் ஆட்டமிழந்தும் வெளியேற பிறகு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்றதால் இஷான் கிஷன் இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் அவருக்கு பதிலாக பீல்டிங் செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவர் ஒருத்தர் தான் இந்திய அணி இப்படி மோசமான தோல்வியை சந்திக்க காரணம் – மொத்தமா செய்ஞ்சிட்டாரு

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் பலரும் இப்படி தொடர்ச்சியாக காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக பார்மில் இருக்கும் வீரர்களை அதாவது ஷர்துல் தாகூரை அணியில் ஆட வைப்பது நல்லது என்றும் ஆஸ்பிட்டல் சென்ற அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக தாகூருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by