நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை இத்தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்கடிக்கும் லட்சியத்துடன் இலங்கை களமிறங்கியுள்ளது. ஏனெனில் அகமதாபாத் நகரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வி அல்லது டிராவை சந்திக்கும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் தற்போது 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி இத்தொடரில் ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்தால் போது ஃபைனலுக்கு செல்லலாம்.
அந்த நிலையில் மார்ச் 9ஆம் தேதியன்று ஹஜ்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 355 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு கேப்டன் கருணரத்தினே 50, குஷால் மெண்டிஸ் 87, ஏஞ்சலோ மேத்யூஸ் 47, தினேஷ் சண்டிமல் 39, டீ சில்வா 46 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
எப்படியாவது ஜெயிக்கணும்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 67 டேவோன் கான்வே 20 என தொடக்க வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் கேன் வில்லியம்சன் 1, ஹென்றி நிக்கோலஸ் 2, டாம் ப்ளன்டல் 7 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 151/5 என அந்த அணி தடுமாறியது இந்திய ரசிகர்களை கலக்கமடைய வைத்த நிலையில் நங்கூரமாக பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் சதமடித்து 102 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார். கூடவே மாட் ஹென்றி 72, நெய்ல் வாக்னர் 27, டிம் சௌதீ 25 என டெயில் எண்டர்கள் முக்கிய ரன்களை எடுத்ததால் தப்பிய நியூஸிலாந்து 373 ரன்கள் குவித்தது.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாடோ 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கைக்கு பெர்னாண்டோ 28, கருணரத்னே 17, குசல் மெண்டிஸ் 14, ஜெயசூர்யா 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 95/4 என சரிந்த அணிக்கு 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 105 ரன்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய தினேஷ் சண்டிமால் 42 ரன்கள் எடுத்த அவுட்டானார்.
ஆனால் அவருடன் தனது அனுபவத்தை காட்டி சதமடித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 11 பவுண்டரியுடன் 115 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் டீ சில்வா 47* ரன்கள் எடுத்தார். அதனால் தப்பிய இலங்கை 2வது இன்னிங்ஸில் 302 ரன்கள் குவித்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பிளாக் டிக்னர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 285 ரன்களை துரத்தி வரும் நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 6 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றிய நிலையில் 4வது நாள் முடிவில் 28/1 ரன்கள் எடுத்துள்ளது.
A terrific knock from Angelo Mathews! 🙌#NZvSL pic.twitter.com/Cs5WILi610
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 12, 2023
Set for a thrilling finish tomorrow!
Can Sri Lanka keep their #WTC23 hopes alive with a win? Or will New Zealand hold firm at Hagley Oval?
Watch the #NZvSL series live with a Black Caps Pass on https://t.co/CPDKNxoJ9v 📺 pic.twitter.com/evwIcOYlaN
— ICC (@ICC) March 12, 2023
நாளைய கடைசி நாளில் அந்த அணியிடம் 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் வெற்றிக்கு 90 ஓவர்களில் 257 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போதைய நிலைமையில் இலங்கை வெற்றி, நியூசிலாந்து வெற்றி அல்லது டிரா என 3 வகையான முடிவும் இப்போட்டியில் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. பொதுவாகவே கடைசி நாளில் கடைசி இன்னிங்ஸில் 150 ரன்களை கூட வெற்றிகரமாக சேசிங் செய்வது டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலானது என்பதால் இலங்கை வெல்வதற்கு வாய்ப்புள்ளது.
இருப்பினும் கடந்த வாரம் இங்கிலாந்தை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து சொந்த மண்ணில் வலுவான அணி என்பதால் இலங்கைக்கு வளைந்து கொடுக்காமல் வெற்றி பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. அதனால் களத்தில் டாம் லாதம் 11*, கேன் வில்லியம்சன் 7* என 2 தரமான வீரர்கள் இருக்கும் நிலையில் எப்படியாவது நியூசிலாந்து வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
When #WTCFinal qualification is at stake…#NZvSL #INDvAUS pic.twitter.com/gUE0aSYaLJ
— Sandipan Banerjee (@im_sandipan) March 12, 2023
FINAL KI RACE 🧐🧐#jadeja #NZvSL #WTC2023 #wtcfinal #INDvsAUS#AUSvIND #BorderGavaskarTrophy #ViratKohli𓃵 #rohitsharma #HBLPSL8#BGT2023 #Australia pic.twitter.com/dlfvDX7z7I
— hardeep singh (@Basra0907) March 12, 2023
இதையும் படிங்க:IND vs AUS : போட்டியின் இடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரேயாஷ் ஐயர் – என்ன ஆனது?
ஏனெனில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற வரும் 4வது டெஸ்ட் போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் 2 அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸை முடிப்பதற்குள் கிட்டத்தட்ட 4 நாட்கள் முடிந்து விட்டது. அதனால் அப்போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளதால் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற இப்போட்டியில் இலங்கைத் தோற்று நியூசிலாந்து வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது.