IND vs AUS : போட்டியின் இடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரேயாஷ் ஐயர் – என்ன ஆனது?

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நான்காவது நாளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

Rohit 1

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நான்காம் நாள் இரண்டாவது செஷன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 455 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்து ஆட்டம்மிழந்த வேளையில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை பதிவு செய்து தற்போது தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது ஐந்து விக்கெட் விழுந்தும் களத்திற்கு வராமல் உள்ளார். இதற்கு காரணம் யாதெனில் :

Shreyas Iyer 1

இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று அவர் தனது முதுகு பகுதியில் அசவுகரித்தை உணர்வதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக தற்போது அவர் மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு ஸ்கேன் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால் இதுவரை அவர் களமிறங்கவில்லை.

- Advertisement -

அவருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் ஜடேஜாவும், ஆறாவது இடத்தில் கே.எஸ் பரத்தும் இறங்கிய வேளையில் தற்போது ஏழாவது வீரராக அக்சர் பட்டேல் விளையாடி வருகிறார். தற்போது வரை ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கவில்லை. மேலும் அவரது நிலை என்ன என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : வீடியோ : 40 மாதங்கள் 1205 நாட்கள் கேரியரின் கடைசி கண்டத்தை உடைத்த கிங் கோலி – பிரையன் லாராவை மிஞ்சி அபார சாதனை

ஆனாலும் பிசிசிஐ அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக அவர் முதல் இன்னிங்சில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement