அவரை எதுக்கு சேத்தீங்க? அக்சர் பட்டேலே விளையாடி இருக்கலாம் – ரோஹித்தின் முடிவை திட்டும் ரசிகர்கள்

Axar Patel Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் முக்கியமான போட்டி இன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது.

Suryakumar YAdav

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 ரன்களை குவித்தார். அவரை தவிர வேறு எந்த வீரரும் 20 ரன்களை கூட தொடவில்லை. அதனை தொடர்ந்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென்னாப்பிரிக்க அணியானது பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அக்சர் பட்டேலை அணியிலிருந்து வெளியேற்றிய முடிவினை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஏனெனில் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் பந்துவீச்சில் அசத்தலாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர்.

Axar Patel and Hardik Patel

ஆனால் பெர்த் ஆடுகளம் முழுவதுமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்கிற காரணத்தினால் அவரை நீக்கிவிட்டு கூடுதல் பேட்ஸ்மேனாக இன்றைய போட்டியில் தீபக் ஹூடாவை ரோஹித் சர்மா தேர்வு செய்து இருந்தார்.

- Advertisement -

ஆனால் இன்றைய போட்டியில் நின்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததால் அவரை தேர்வு செய்து அணியில் எடுத்த முடிவு தவறான ஒன்று என்றும் அதற்கு பதிலாக அக்சர் பட்டேலே இருந்திருந்தால் கூட பந்துவீச்சில் இந்திய அணி சற்று கூடுதல் பலத்துடன் இந்த லோ ஸ்கோரிங் மேட்சை முடிக்க அவரை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்.

இதையும் படிங்க : யார் எப்படி வேணுனாலும் போடுங்க. எனக்கு எங்க போட்டாலும் அடிக்க தெரியும் – பெர்த்தை கலக்கிய இந்திய வீரர்

மேலும் இந்திய அணிக்காக கடந்த பல போட்டிகளாக விளையாடாமல் பெஞ்சிலே இருக்கும் அவருக்கு திடீரென வாய்ப்பு வழங்கியது தவறு என்றும் தொடர்ச்சியாக விளையாடி வரும் அக்சர் பட்டேலே தொடர்ந்து விளையாடி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement