யார் எப்படி வேணுனாலும் போடுங்க. எனக்கு எங்க போட்டாலும் அடிக்க தெரியும் – பெர்த்தை கலக்கிய இந்திய வீரர்

Suryakumar YAdav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் தோற்கடித்து கத்துக்குட்டி நெதர்லாந்தை அசால்ட்டாக வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தது. அந்த நிலையில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்வதற்கு தேவையான 3வது வெற்றியை சுவைக்க அக்டோபர் 30ஆம் தேதியன்று பெர்த் நகரில் வலுவான தென்னாபிரிக்காவை இந்தியா எதிர்கொண்டது.

அப்போட்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவை 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 (14) ரன்களில் அவுட்டாக்கிய லுங்கி நிகிடி மறுபுறம் தடவிய கேஎல் ராகுலையும் 9 (14) ரன்களில் காலி செய்தார். அதனால் 26/2 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்றுவார் என கருதப்பட்ட விராட் கோலியையும் அதிரடி காட்ட விடாமல் 2 பவுண்டரியுடன் 12 (11) ரன்களில் காலி செய்த அவர் மிரட்டலாக பந்து வீசினார். அப்போது களமிறங்கிய தீபக் ஹூடா அன்றிச் நோர்ட்ஜேவின் அதிரடியான வேகத்தால் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா அடுத்த ஓவரிலேயே லுங்கி நிகடியின் வேகத்தில் 2 (3) ரன்களில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அப்போவே சொன்னாங்க:
அதனால் 49/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா 100 ரன்களை தாண்டுமா என்று கவலையடைந்த இந்திய ரசிகர்கள் அப்போதே எச்சரித்தார்கள் இந்திய அணி தான் சுதாரிக்கவில்லை என்பதையும் உணர்ந்தனர். ஏனெனில் இப்போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுக்கு கை கொடுக்கும் என்பதால் அதில் மிரட்டக்கூடிய தங்களது தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் லன்ஸ் க்ளூஸ்னர் ஆரம்பத்திலேயே எச்சரித்தார்.Suryakumar YAdav

அதுபோக எங்களது வேகம் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று தென்னாப்பிரிக்க பவுலர் அன்றிச் நோர்ட்ஜெ கூறியிருந்தார். அவர்கள் சொன்னது போலவே இந்திய டாப் ஆர்டர் சொதப்பய நிலையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சரிவை சரி செய்வதற்காக மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் தமக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சூரியகுமார் யாதவ் வெளுத்து வாங்கினார். அதே வேகம், பவுன்ஸ் ஆகியவற்றுடன் காற்றையும் கணித்து அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் 6வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றிய போது மறுபுறம் கடைசி வரை மெதுவாகவே விளையாடிய தினேஷ் கார்த்திக் 6 (15) ரன்களில் ஏமாற்றினார்.

அப்போது அஷ்வின் போராடி 7 (11) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்வது போல் மிரட்டிய சூரியகுமார் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் அவ்வளவு கடினமான பவுலிங் சூழ்நிலையிலும் அற்புதமாக செயல்பட்டு 68 (40) ரன்களை குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் தன்னை சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்த அவரது பேட்டிங் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி 20 ஓவர்களில் 133/9 ரன்கள் சேர்க்க வைத்தது. அவர் இல்லையே 100 ரன்களைக் கூட இந்தியா தாண்டியிருக்காது என்பதே நிதர்சனம்.

ஏனெனில் சூரியகுமார் மட்டும் 68 (40) ரன்களை 170 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய நிலையில் எஞ்சிய இந்திய வீரர்கள் வெறும் 57 (80) ரன்களை 71.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமாக விளையாடினார்கள். மறுபுறம் சொன்னது போலவே பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட தென்னாப்பிரிக்காவின் சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளையும் வேன் பர்ணல் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர். இந்த பந்து வீச்சை பார்த்து இந்திய பவுலர்களும் அசத்துவார்களா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement