- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லூசர் லூசர்.. அப்படியே மூட்டைய கட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க.. அப்ரிடி, அப்ராருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. துபாயில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 242 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சவுத் சாக்கில் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியா கிரிக்கெட் அணியை கேப்டன் ரோஹித் சர்மா 20, விராட் கோலி 100*, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்கள். அதனால் சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தும் தோல்வியை சந்தித்த நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் இத்தொடரில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -

வீட்டுக்கு கிளம்புங்க:

ஏனெனில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அந்த அணி தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அவுட்டானாலும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி பாகிஸ்தானுக்கு சவாலைக் கொடுத்தார். அப்போது அவரை பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அகமது அற்புதமான பந்தால் 46 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார்.

அதனால் ஆச்சரியமடைந்த கில் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கிச் சென்றார். ஆனால் மறுபுறம் அப்ரார் அஹ்மத் கையை கட்டிக்கொண்டு தலையை ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டு மெதுவாக “வெளியே போ போ” என்ற வகையில் தலை அசைத்து சைகை செய்து கில்லை அனுப்பி வைத்தார். இறுதியில் விராட் கோலி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்கள் அவரை நன்றாக எதிர்கொண்டு பாகிஸ்தானை தோற்கடித்தார்கள்.

- Advertisement -

லூசர் அப்ரிடி:

அதனால் சுப்மன் கில் செமி ஃபைனலில் விளையாடுவதற்கு செல்வார். நீங்கள் மூட்டையை கட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புவதற்கு தயாராகிச் செல்லுங்கள் என்று அப்ரார் அஹ்மதுக்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் பதிலடிக் கொடுத்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க விராட் கோலி 90 ரன்கள் தொட்டதும் சதத்தை அடிப்பதற்காக முயற்சி செய்தார்.

இதையும் படிங்க: ஐ.சி.சி தொடர்களில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய விராட் கோலி – விவரம் இதோ

அப்போது 42வது ஓவரை வீசிய ஷாஹீன் அப்ரிடி 3 ஒய்ட் பந்துகளை போட்டார். அதனால் கடுப்பான ரசிகர்கள் விராட் கோலியின் சதத்தை தடுப்பதற்காகவே இப்படி ஒய்ட் போடுகிறார் என்று நினைத்து லூசர் லூசர் என்று கூச்சலிட்டு சாகின் அப்ரிடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இறுதியில் அதையும் தாண்டி அக்சர் பட்டேல் உதவியுடன் விராட் கோலி தன்னுடைய 51வது ஒருநாள் சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -