டிராவிட் இருந்தாலே இப்படித்தான் ஆகுமா? சச்சினுடன் ஜடேஜாவை இணைத்து – பழைய சம்பவத்தை கிளரும் ரசிகர்கள்

Dravid
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்து இன்னும் இந்திய அணியை விட 466 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடுகையில் ஜடேஜா 175 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக களத்தில் இருந்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் டிக்ளேர் செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்னும் 4-5 ஓவர்கள் விட்டிருந்தால் கூட எளிதாக ஜடேஜாவால் 200 ரன்களை அடித்து இருக்க முடியும் என்றாலும் ரோஹித் டிக்ளேர் அறிவித்ததால் ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தோடு இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிடை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனெனில் இதற்கு முன்னதாக டிராவிட் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது கடந்த 2003 ஆம் ஆண்டு ஆண்டில் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது முல்தான் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 675 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

sachin dravid

ஆனால் அதில் வருத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் அந்த போட்டியில் சேவாக் 309 ரன்களை குவித்து இருந்த வேளையில் சச்சின் 194 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அப்போது அனைவரும் சச்சின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் அருமையான இரட்டை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டன் டிராவிட் எந்தவித அவசியமும் இன்றி திடீரென டிக்ளேர் அறிவித்தார். இதனால் சச்சின் இரட்டை சதத்தை தவறவிட்ட அதிருப்தியில் வெளியேறினார்.

- Advertisement -

அதேபோன்று அந்த போட்டியில் இந்திய அணி அவர்களை எளிதாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்படி எந்தவித அவசியமும் இன்றி முன்கூட்டியே சச்சின் 200 ரன்கள் அடிக்க விடாமல் டிராவிட் டிக்ளேர் செய்தது பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தி இருந்தது. அப்படி சச்சினை 200 ரன்கள் அடிக்க விடாமல் சீக்கிரம் டிக்ளேர் கொடுக்க வேண்டிய அவசியமும் அந்த போட்டியில் ஏற்படவில்லை.

இதையும் படிங்க : ரோஹித்தின் அதிரடியான முடிவால் மகிழ்ச்சியடைந்த இலங்கை வீரர்கள். ஆனா ஜடேஜா அதிருப்தி – என்ன நடந்தது?

அதே போன்று இன்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கூட இந்திய அணி மிக வேகமாக சிறப்பான ரன் ரேட்டில் ரன்களை குவித்து வந்தது. இதனால் விரைவில் டிக்ளேர் செய்ய வேண்டிய அவசியம் கூட இந்திய அணிக்கு இல்லை. இருப்பினும் ரோஹித் முன்கூட்டியே டிக்ளேர் அறிவித்தார். இப்போதும் டிராவிட் அணியின் பயிற்சியாளராக இருந்து இதற்கு தடை ஏதும் தெரிவிக்காமல் ரோஹித்தை டிக்ளேர் செய்ய அனுமதித்தால் தற்போது சச்சின் டெண்டுல்கர் உடனான அந்த சம்பவத்தையும் ஜடேஜாவின் இந்த சம்பவத்தையும் வைத்து ரசிகர்கள் டிராவிடை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement