- Advertisement -
ஆசிய கோப்பை

இதெல்லாம் 2005லயே தோனி செஞ்சுட்டாரு.. பாக் வீரரின் கிண்டல் கொண்டாட்டத்துக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இத்தொடரில் 2வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் பர்ஹான் கொடுத்த கேட்சை அபிஷேக் சர்மா கோட்டை விட்டார். அதைப் பயன்படுத்திய பர்ஹான் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். அப்போது தம்முடைய பேட்டை அவர் துப்பாக்கி போல காண்பித்து இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் கொண்டாடினார்.

- Advertisement -

2005 தோனி மாதிரி:

அதாவது சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் உண்மையில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ஊடகங்களும் இந்தியாவை தோற்கடித்து தாங்கள் வென்றதாக பிரகடனப்படுத்தின. அதை நம்பிய பர்ஹான் “எல்லையில் இந்தியாவை எப்படி பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொண்டு வீழ்த்தினார்களோ” அதே போல களத்தில் இந்திய வீரர்களை தாம் எதிர்கொள்கிறேன் என்ற வகையில் அப்படி கொண்டாடினார்.

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இம்மாதிரியான கொண்டாட்டத்தை 2005லேயே எங்களுடைய எம்எஸ் தோனி எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் உங்களை விட சிறப்பாக கொண்டாடியதாக அவருக்கு சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அரை சதத்தை அடித்த பின் தடுமாறிய அவர் 58 (45) ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக 172 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஷாஹின் அப்ரிடியை சிக்சராக தெறிக்க விட்டார்.

- Advertisement -

செஞ்சு விட்ட அபிஷேக்:

அதே போல ஹரிஷ் ரவூப்க்கு எதிராகவும் அவர் அதிரடியாக விளையாடினார். அதனால் கடுப்பான அப்ரிடி, ரவூப் ஆகியோர் அபிஷேக்கை ஸ்லெட்ஜிங் செய்து சாய்க்க முயற்சித்தனர். ஆனால் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஸ்லெட்ஜிங் செய்ததால் கோபமடைந்த அபிஷேக் அவர்களுக்கு வாயில் மட்டுமின்றி பேட்டால் பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவிடம் இருக்கும் இந்த திறமைக்கு அவர் எங்கயோ போகப்போகிறார் – ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டு

தொடர்ந்து மிரட்டிய அவர் 24 பந்தில் 50 அடித்த போது தம்முடைய கைவிரலை உயர்த்தி கொண்டாடினார். அதை வைத்து தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானை சூறையாடியதைப் போல பர்ஹான் மற்றும் பாகிஸ்தான் அணியை அபிஷேக் வெளுத்து வாங்கியதாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இறுதியில் அபிஷேக் 74, கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்தது.

- Advertisement -