வண்டி இப்போவே தள்ளாடுதே! டி20 உலககோப்பைக்கு முன் இந்திய ரசிகர்கள் கவலை – என்ன நடந்தது?

rohith
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த உலகத் தரம் வாய்ந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படும் வீரர்கள் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை மனதில் வைத்துக் கொண்டு தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் கூட தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்திய அணியில் இடத்தை பிடிப்பதற்காக போட்டி போட்டு வருகின்றனர்.

Indian Team

- Advertisement -

அதேசமயம் இந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

வண்டி தள்ளாடுதே:
இந்த நிலைமையில் டி20 உலகக்கோப்பை துவங்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் இளம் வீரர்களை பற்றி பின்பு பார்ப்போம், முதலில் முதுகெலும்பு வீரர்களாக கருதப்படும் வீரர்கள் திண்டாடுகிறார்களே என்ற மிகப்பெரிய கவலை இந்திய ரசிகர்களிடம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியில் முக்கிய வீரர்களாக கருதப்படுபவர்கள் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் படுமோசமான பார்மில் தவிப்பதால் இந்திய அணி இப்போதே தள்ளாடுவதை பற்றி பார்ப்போம்.

Rohit

1. ரோஹித் சர்மா: 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்து அதன் வாயிலாக இன்று இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாகும் அளவுக்கு ரோகித் சர்மா உயர்ந்துள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற பின் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் தலைமையில் இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றது என்றாலும் அந்த அணிகள் எல்லாம் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற கத்துக்குட்டிகளாகும்.

- Advertisement -

தற்போது அவரின் பார்ம் என்று பார்க்கும் போது பேட்டிங்கில் இதுவரை 8 போட்டிகளில் வெறும் 153 ரன்களை 19.12 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவிக்கிறார். கேப்டன் மற்றும் முதல் ஓப்பனிங் பேட்ஸ்மேனான அவரின் பேட்டிலிருந்து ரன் வராதது மும்பையின் தொடர்ச்சியான 8 தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. மும்பை கூட பரவாயில்லை நாளை இந்தியாவிற்காக உலக கோப்பையில் இதே நிலைமை தொடர்ந்தால் இந்தியாவின் கதி அவ்வளவுதான் என்று ரசிகர்கள் கலக்கமடைகிறார்கள்.

kohli 1

2. விராட் கோலி: சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி இந்த வருடம் 8 போட்டிகளில் வெறும் 119 ரன்களை 17 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். அதிலும் கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டான அவர் தனது வாழ்வின் உச்சபட்ச மோசமான பார்ம் அவுட்டில் உள்ளார் என்பதால் உலகக் கோப்பைக்கு முன்பு இவர் எப்படியாவது பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகிறார்கள்.

- Advertisement -

3. சூரியகுமார் யாதவ்: உலக கோப்பையில் 4-வது இடத்தில் களமிறங்கும் வீரராகக் கருதப்படும் இவர் முதல் ஒருசில போட்டிகளில் காயத்தால் பங்கேற்காத நிலையில் அதன்பின் பங்கேற்ற ஒருசில போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டார்.

Sky

இருப்பினும் தொடர் தோல்விகளால் தவிக்கும் மும்பைக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இதுவரை அவர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும் ஓரளவு நல்ல பார்மில் இருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாகும்.

- Advertisement -

4. ரவீந்தர ஜடேஜா: சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடர் வரை அற்புதமாக செயல்பட்ட ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சென்னையின் கேப்டனானதும் என்னயா ஆச்சு என்பது போல் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் 2019க்கு முன் எப்படி சுமாராக செயல்பட்டாரோ அதேபோல் மீண்டும் சொதப்புகிறார்.

jadeja

அதிலும் உலகின் நம்பர் ஒன் பீல்டர் என அறியப்படும் அவர் எளிதான கேட்ச்களை கூட கோட்டை விடும் அளவுக்கு பார்மை இழந்து தவிக்கிறார். இருப்பினும் இந்தியாவிற்காக விளையாடும்போது கேப்டன்ஷிப் அழுத்தம் இருக்காது என்பதால் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் நம்ப வேண்டியுள்ளது.

6. ஜஸ்பிரித் பும்ரா: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பார்ம் அவுட் இல்லை என்றாலும் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இவரும் சூர்யகுமார் யாதவ் போல மும்பைக்கு முதல் வெற்றியை பதிவு செய்யும் அளவுக்கு அவரின் தரத்திற்கு இதுவரை பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை.

இதையும் படிங்க : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பவுலிங்கில் கலக்கும் அணி என்றால் அது இந்த அணிதான் – பார்த்திவ் படேல் வெளிப்படை

ஆறுதல்: இந்த வீரர்கள் சொதப்பும் நிலையில் அடுத்தடுத்த சதங்களுடன் மிரட்டும் கேஎல் ராகுல், நீண்ட நாட்களுக்கு பின் பந்துவீச துவங்கியதுடன் பேட்டிங்கில் 3-வது இடத்தில் மிரட்டுவதுடன் புதிய கேப்டனாகவும் ஆல்-ரவுண்டராகவும் கலக்கும் ஹர்திக் பாண்டியா, பல மாதங்களுக்குப் பின் ஜோடியாக சுழல்பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தும் யுஸ்வென்ற சஹால் – குல்டீப் யாதவ், காயத்திலிருந்து குணமடைந்தது அசத்தும் தமிழக வீரர் நடராஜன் மற்றும் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் போன்றவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தியாகும்.

Advertisement