இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்கா நம்ம ரிங்கு சிங் வருவார்னு அவங்க எதிர்பாக்குறாங்க.. கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 10 ஆம் தேதி துவங்கியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இருப்பினும் டர்பன் நகரில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் அடுத்த போட்டி டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் வாய்ப்பு பெற்றுள்ள நிறைய இளம் வீரர்களுக்கு மத்தியில் ரிங்கு சிங் ஆட்டத்தை பார்ப்பதற்காக அணி ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஏனெனில் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்த அவர் மொத்த உலகையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்து இந்தியாவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

அடுத்த யுவராஜ் சிங்:
அந்த வாய்ப்பில் அயர்லாந்துக்கு எதிரான அறிமுக தொடரிலேயே கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அதைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் அதிரடியாக 105 ரன்கள் குவித்து அசத்திய அவர் தோனி வரிசையில் அடுத்த ஃபினிஷராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் ஜாம்பவான் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் போல ரிங்கு சிங் வருவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்த நம்பிக்கை ரிங்குவிடமும் இருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்திய அணியின் அங்கமாக இருக்கும் அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது”

- Advertisement -

“ரசிகர்கள் அவரை மற்றொரு யுவராஜ் சிங்காக பார்க்கிறார்கள். ரிங்கு சிங் – யுவராஜ் சிங். எனவே யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட்டுக்காக என்ன செய்தாரோ அதில் கொஞ்சம் செய்தால் கூட ரிங்கு சிங் அற்புதமாக செயல்பட்டார் என்று பாராட்டலாம். திறமை என்பது அனைவருக்கும் கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் ஒரு நாள் முழுவதும் விளையாடும் போது திறமையில் கொஞ்சம் பஞ்சம் இருந்தாலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் அசத்த முடியும்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே வீரர் புறக்கணிப்பு.. தேர்வுக்குழுவின் முடிவு தவறான ஒன்று – முன்னாள் வீரர்கள் சாடல்

“அதை தான் அவர் கடந்த 2 – 3 வருடங்களாக செய்து வருகிறார். சமீபத்திய வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று உள்ளே வெளியே சென்று வந்த அவர் ஒரு வழியாக தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement