
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்ததால் இன்றைய போட்டியில் நிச்சயம் இந்திய அணியில் ஒரு மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த போட்டியில் அறிமுக வாய்ப்பினை பெற்ற ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றைய மூன்றாவது போட்டியிலும் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த போட்டியில் அறிமுகமாகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டு மீண்டும் அந்த இடத்திற்கு பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியிலும் அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங் சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அவருக்கு அறிமுக வாய்ப்பை வழங்கி அவரது செயல்பாட்டினை பார்க்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தனர்.
இவ்வேளையில் இன்றைய போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சில் பல்வேறு வகையான வெறியேஷன்களை வைத்திருக்கும் அர்ஷ்தீப் சிங் மிகச் சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்து அட்டகாசமாக பந்துவீசி வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஏன் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : IND vs WI : 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகிய நட்சத்திர இந்திய வீரர் – வெளியான அறிவிப்பு
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ட்ரினிடாட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.