சதமடித்த ரோஹித். வாய்ப்பை தவறவிட்ட கோலி. இந்தியா எளிதான வெற்றி – ரசிகர்கள் மகிழ்ச்சி

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தற்போது பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடியது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து விராட் கோலி சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஸ்ரேயா ஐயர் மற்றும் மணிஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களுடனும், மணிஷ் பண்டே 8 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை தேடித் தந்தனர். இந்திய அணி முடிவில் 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Rohith

இந்த போட்டியில் காயம் காரணமாக தவான் இறங்க முடியாமல் போனது. மேலும் ரோகித் சர்மா சதம் மற்றும் கோலியின் அருமையான ஆட்டம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பினிஷிங் என இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement