உ.கோ’யில் பூனையாகவும் இதர தொடரில் புலியாகவும் பாயும் இந்தியா – வித்யாச புள்ளி விவரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி, காரணம் என்ன

IND vs NZ
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூஸிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் ஓய்வெடுத்த இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கியது. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் சூரியகுமாரின் அதிரடியான சதத்தால் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற கடைசி போட்டியை யாருமே எதிர்பாராத வகையில் மழை வந்து சமன் செய்தது.

Suryakumar Yadav

- Advertisement -

ஏனெனில் நேப்பியர் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவோன் கான்வே 59 ரன்களும் கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்த அதிரடியால் ஒரு கட்டத்தில் 130/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அனலாக பந்து வீசிய இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை சாய்த்து 19.4 ஓவரில் நியூசிலாந்தை 160 ரன்களுக்கு சுருட்டியது. அந்தளவுக்கு தரமாக செயல்பட்ட இந்திய சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்களை எடுத்தனர்.

அதிர்ச்சி புள்ளிவிவரம்:

அதை தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 10, ரிஷப் பண்ட் 11, ஷ்ரேயஸ் ஐயர் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் சூரியகுமாரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் முக்கிய நேரத்தில் கேப்டன் பாண்டியா அதிரடியாக 30* (18) ரன்கள் எடுத்ததால் 9 ஓவரில் 75/4 என்ற நிலைமையில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்தது. அப்போது டிஎல்எஸ் முறைப்படி ஆச்சரியப்படும் வகையில் இந்தியா தேவையான ரன்களை கச்சிதமாக எடுத்திருந்ததால் போட்டி டையில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

INDia Hardik pandya

அதன் காரணமாக 1 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் சாதித்து காட்டியுயுள்ளது. ஆனால் இதை பார்க்கும் ரசிகர்களுக்கு உலகக்கோப்பையில் மட்டும் இந்தியா வெற்றி பெறாதது ஏன் என்ற ஆதங்கமே எழுகிறது. அவர்களது கேள்வி இந்த புள்ளி விவரத்தை பார்த்தால் இன்னும் அதிகமாகும் என்று சொல்லலாம். ஏனெனில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 உலக கோப்பைக்குப்பின் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்தியாவின் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.

- Advertisement -

1. குறிப்பாக இந்த தொடரையும் சேர்த்து 2022இல் பங்கேற்ற 9 இருதரப்பு டி20 தொடர்களில் 8 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா கடந்த ஜூலை மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை சமன் செய்தது. ஆனால் இடையே 6 அணிகள் பங்கேற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா தோற்றது.

indvsnz

2. அதை விட நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக பங்கேற்ற 11 டி20 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா நேற்றைய போட்டியை சமன் செய்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் அந்த 9 வெற்றிகளையும் இதே போன்ற இருதரப்பு தொடர்களில் இந்தியா பதிவு செய்துள்ளது. அந்த ஒரு தோல்வி கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நியூசிலாந்திடம் இந்தியா மண்ணை கவ்வியதால் வந்தது.

3. இதிலிருந்து இருதரப்பு தொடர்களில் புலியாக சீறிப்பாய்ந்து எதிரணிகளை அடித்து நொறுக்கி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக மிரட்டும் இந்தியா ஐசிசி உலகக் கோப்பைகளில் பூனையாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் புரியவில்லை.

INDia

4. ஏனெனில் யாரும் வேண்டுமென்றே உலகக் கோப்பையில் தோற்க மாட்டார்கள். இருப்பினும் அழுத்தமான உலகக்கோப்பையில் தோற்று விடுவோமோ என்ற பயமும் சுமாராக செயல்பட்டால் எங்கே தங்களுடைய இடம் பறிபோய் விடுமோ என்ற வீரர்களின் தன்னிச்சையான பயமும் தான் இந்த தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

Advertisement