நியூஸிலாந்தில் துவங்கும் உலககோப்பையை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

worldcup
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக 1 டி20 போட்டி பிப்ரவரி 9ஆம் தேதியன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் நகரில் நடைபெற உள்ளது.

womens

- Advertisement -

அதை தொடர்ந்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த ஒருநாள் தொடரின் 5 போட்டிகளும் பிப்ரவரி 12, 15, 18, 22, 24 ஆகிய தேதிகளில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

உலககோப்பைக்கு தயாராக:
வரும் மார்ச் மாதம் இதே நீயுசிலாந்து மண்ணில் ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் நியூசிலாந்து நாட்டிற்கு ஒரு மாதம் முன்பாகவே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அந்நாட்டு கால சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள இந்த தொடரில் பங்கேற்க உள்ளது.

Womens

இதில் முதலில் நடைபெற உள்ள டி20 போட்டிக்கு அனுபவ வீராங்கனை மற்றும் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வெடுக்க உள்ளார். எனவே அவருக்கு பதில் ஹர்மன்பிரீத் கவுர் இந்த டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட உள்ளார். அதன்பின் நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கும் உலக கோப்பைக்கும் மிதாலி ராஜ் கேப்டன்ஷிப் செய்ய உள்ளார்.

- Advertisement -

உலகக்கோப்பையை வெல்லுமா:
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படும் இந்திய வீராங்கனைகளுக்கு அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பைக்கான இந்திய அணியில் நேரடியாக வாய்ப்பு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது பற்றி இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் கூறியது பின்வருமாறு. “உலககோப்பைக்கு தயாராகும் வண்ணம் நாங்கள் இந்த தொடரில் பங்கேற்க இங்கு வந்துள்ளோம். ஏனெனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் எந்த மாதிரியான பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்த தொடர் உதவியாக இருக்கும். உலகக் கோப்பைக்கு நாங்கள் செல்லும்போது ஒரு வலுவான தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள உள்ளோம். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் விளையாட இருக்கும் முக்கிய வீராங்கனைகளுக்கு தேவையான கால அவகாசத்தை இந்த தொடரில் அளிக்க உள்ளோம்” என கூறியுள்ளார்.

Mithali 2

 

- Advertisement -

இதற்கு முன் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி எத்தனையோ முறை முயன்றபோதும் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்ட போதிலும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை 2022:
எனவே இந்த முறை எப்படியாவது உலக கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு மாதம் முன்பாகவே நியூசிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணியினர் அங்கு அந்த நாட்டு கால சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள இந்த தொடரில் விளையாட உள்ளார்கள். இம்முறை ஸ்மிருதி மந்தனா போன்ற வீராங்கனை ஷபாலி வர்மா, ஸ்னே ராணா போன்ற இளம் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மேலும் இந்த உலக கோப்பையில் கடைசி முறையாக அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்யவுள்ளார் என்பதால் அவர் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வாங்கிக் கொடுத்து வெற்றியுடன் வழி அனுப்புவார்களா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

crickwomens

இதை தொடர்ந்து வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் மார்ச் 6ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. அதன்பின் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக வரும் மார்ச் 10-ஆம் தேதியும் இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 16-ம் தேதியும் மார்ச் 19ம் தேதி வலுவான ஆஸ்திரேலியாவையும் இந்திய மகளிர் அணி சந்திக்க உள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் 22 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் வங்கதேசத்தையும் மற்றும் தென்ஆப்பிரிக்காவையும் இந்தியா சந்திக்க உள்ளது.

நியூஸிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் மகளிர் உலககோப்பை 2022 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதோ:

மித்தாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீட் கௌர் (துணை – கேப்டன்), ஸ்ம்ரிதி மந்தனா, ஷபாலி வர்மா, யஸ்டிகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஸ் (கீப்பர்), ஸ்னே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரக்கர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாகூர், தானியா பாட்டியா (கீப்பர்), ராஜேஸ்வரி கைக்வாட், பூனம் யாதவ்.

Advertisement