எனக்கு இது சரியா படல.. அவங்க தான் ஜெயிப்பாங்க.. வெற்றியாளர் பற்றி மைக்கேல் அதர்டன் பேட்டி

Micheal atherton
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. வரும் ஜூன் 25ஆம் தேதி துவங்கும் அந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. உலக அரங்கில் டாப் 2 தரமான அணிகள் மோதும் இந்த தொடரில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

ஏனெனில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவாக செயல்படக்கூடிய இந்தியா கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வருகிறது. அதனால் இம்முறையும் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் ரவீந்திர ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்களை வைத்து இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

வித்யாச கணிப்பு:
ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் யுக்தியை கடைப்பிடித்து வரும் இங்கிலாந்து தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

இந்நிலையில் என்ன தான் இங்கிலாந்து அதிரடியாக விளையாடினாலும் தரமான ஸ்பின்னர்களை கொண்ட இந்தியாவை சுழலுக்கு சாதகமான மைதானங்களில் தோற்கடிப்பது கடினம் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் கூறியுள்ளார். அதனால் இத்தொடரில் இந்தியா வெல்வதற்கே வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா இத்தொடரில் வெல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுடைய ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை விட சிறந்தவர்கள்”

- Advertisement -

“அது இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். பொதுவாகவே வரலாற்றில் இந்தியாவுக்கு நீங்கள் சென்றால் அங்கே சுழல் பெரிய அங்கமாக இருக்கும். அதே சமயம் இந்தியா வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் 4 ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை விட வித்தியாசமானவர்கள். அவர்களிடம் ரவீந்திர ஜடேஜா அக்சர் பட்டேல் ஆகிய 2 இடது கை விரல் ஸ்பின்னர்களும் மணிக்கட்டு ஸ்பின்னர் குல்தீப் யாதவும் உள்ளனர்”

இதையும் படிங்க: அண்டர்-19 உ.கோ 2024 : வெறும் 167 ரன்ஸ்.. வம்பிழுத்த வங்கதேசத்தை வசமாக செய்த இளம் இந்திய படை

“அதை விட வரலாற்றின் மகத்தான ஸ்பின்னர் அஸ்வின் அவர்களிடம் இருக்கிறார். மறுபுறம் இங்கிலாந்தில் ஜேக் லீச் அனுபவத்தைக் கொண்டிருந்தாலும் ரீகன் அகமது, சோயப் பசீர், டாம் ஹார்ட்லி ஆகியோர் அனுபவமற்றவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் தேர்வு குழுவினர் அவர்களுக்கு நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்திய அணி அளவுக்கு இங்கிலாந்து அணியிடம் தரமான அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement