இரண்டாவது இன்னிங்சில் 10 வீரர்களுடன் மட்டுமே இந்திய அணி பேட்டிங் செய்யும் – அப்போ சோலி முடிஞ்சதா ?

Jadeja

சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் மற்றும் லாபுஷேன் உதவியினால் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் கில் மற்றும் புஜாரா ஆகியோர் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 96 ரன்கள் பின்தங்கி இருந்தது.

pucovski 1

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியிலும் 81 ரன்கள் குவித்து அசத்தினார். லாபுஷேன் 73 ரன்களை குவித்தார். இதனால் 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்போது இந்திய அணி 4 ஆவது நாளில் 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்நிலையில் முதல் இன்னிங்சின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஜடேஜாவின் இடது கை கட்டை விரல் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாட மாட்டார் என்றும் மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

jadeja

அதே வேளையில் இடது முழங்கையில் அடிவாங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் பெரிய அளவில் இல்லை என்பதாலும் தற்போது ஓரளவு தேறி உள்ளதாலும் அவர் இரண்டாவது இன்னிங்சின்போது பேட்டிங் செய்வார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் விளையாடப் போவதில்லை என்ற காரணத்தினால் இந்திய அணி 10 வீரர்களை வைத்து மட்டுமே பேட்டிங் செய்ய முடியும்.

- Advertisement -

jadeja 1

ஏற்கனவே இவ்வளவு பெரிய இலக்கை எதிர்த்து விளையாடுவது கடினம் என்ற நிலையில் முக்கிய வீரர் ஜடேஜாவின் போது இந்திய அணி இழந்துள்ளது பெரிய பின்னடைவையே தரும் என்றும் மேலும் இந்த போட்டியில் ஒன்றரை நாள் ஆட்டம் மீதம் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.