WTC Final : ஒரு பார்ட்னர்ஷிப் அமைஞ்சா ஃபைனலில் 450 ரன்களையே அசால்ட்டா சேசிங் பண்ணிடுவோம் – இந்திய வீரர் உறுதி

IND vs AUS
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்று அசத்தியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுமாராக செயல்பட்டு வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Steve Smith

- Advertisement -

சொல்லப்போனால் கேப்டன் ரோஹித் சர்மா 15, கில், விராட் கோலி 14, புஜாரா 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, சர்துல் தாக்கூர் 51 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முக்கிய ரன்கள் குவித்து ஃபாலோ ஆன் பெறுவதிலிருந்து காப்பாற்றினர். அந்தளவுக்கு அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 123/4 ரன்கள் எடுத்துள்ளது.

சேசிங் செய்வோம்:
கவாஜா 13, வார்னர் 1, ஸ்டீவ் ஸ்மித் 34, டிராவிஸ் ஹெட் 18 என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்த அந்த அணிக்கு களத்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் 41*, கேமரூன் க்ரீன் 7* ரன்களுடன் உள்ளனர். அந்த அணிக்கு இன்னும் கைவசம் 6 விக்கெட்டுகள் மீதும் இருக்கும் நிலையில் ஏற்கனவே 296 ரன்கள் முன்னிலை வகிப்பதால் குறைந்தது 400க்கும் மேற்பட்ட இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதாரண போட்டியிலேயே 4வது இன்னிங்ஸில் வெறும் 150 – 200 ரன்களை சேசிங் செய்வதே கடினமாகும்.

Thakur 51

அது போக நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓவல் மைதானத்தில் இதற்கு முன் கடைசியாக 1902இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அதிகபட்சமாக 263 ரன்கள் இலக்கை மட்டுமே வெற்றிகரமாக 1 விக்கெட் வித்தியாசத்தில் சேசிங் செய்தது. அப்படிப்பட்ட நிலையில் இந்த மாபெரும் ஃபைனலில் முதல் இன்னிங்ஸில் திண்டாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் 2வது இன்னிங்ஸில் அவ்வளவு பெரிய இலக்கை துரத்துவார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் ரகானேவுடன் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆனை தவிர்த்தது போல 2வது இன்னிங்ஸில் ஒரு சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் இந்தியா எளிதாக 450 ரன்களை கூட சேசிங் செய்யும் திறமை கொண்டிருப்பதாக சர்துள் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் 3வது நாள் முடிவில் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் என்பது ஜாலியான விளையாட்டாகும். நீங்கள் குறிப்பாக ஐசிசி ஃபைனலில் எது சரியான இலக்கு என்பதை சொல்ல முடியாது. எனவே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் நீங்கள் 450 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை சேசிங் செய்து விடலாம்”

Thakur-3

“மேலும் கடந்த வருடம் இங்கிலாந்து இங்கே கிட்டத்தட்ட 400 ரன்களை விக்கெட் இழக்காமலேயே சேசிங் செய்ததை பார்த்தோம். எனவே அது எங்களுக்கு நேர்மறையான அறிகுறியாகும். அதனால் ஆஸ்திரேலியா என்ன இலக்கு நிர்ணயித்தாலும் அதைப்பற்றி இப்போதே கணிப்பதற்கு எதுவுமில்லை. ஏனெனில் டெஸ்ட் போட்டிகள் என்பது ஒரு மணி நேரத்தில் மாறக் கூடியதாகும். எனவே 4வது நாளில் நாங்கள் வெற்றி பெறும் உறுதியுடன் ஃபீல்டிங் செய்ய உள்ளோம். மேலும் ரகானே எங்களுடைய சீனியர் வீரர்”

இதையும் படிங்க:WTC Final : போட்டியின் மூன்றாம் நாளன்று சுப்மன் கில்லுக்கு ப்ரபோஸ் செய்த ரசிகை – வைரலாகும் புகைப்படம்

“அப்படிப்பட்ட அவர் ஏதேனும் ஒரு தவறு செய்தால் என்னிடம் வந்து சந்தேகத்தை கேள்? ஏனெனில் நாம் தான் கடைசி பேட்டிங் ஜோடி என்று சொன்னார். அந்த வகையில் அவருடைய ஆலோசனையுடன் நாங்கள் நீண்ட நேரம் களத்தில் விளையாடியது இந்தியாவுக்கு பயனை கொடுத்தது” என்று கூறினார். மொத்தத்தில் இந்தியா வெல்கிறதோ இல்லையோ இவருடைய நம்பிக்கை ரசிகர்களிடம் பாராட்டுகளை பெறுகிறது.

Advertisement