பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், அதிக ரன்கள் – விக்கெட் எடுத்தவர்களின் பட்டியல்

Advertisement

இலங்கையின் பல்லக்கேல் நகரில் செப்டம்பர் 2ஆம் தேதி 2023 ஆசிய கோப்பையின் லீக் சுற்றுப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்றன. விரைவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடக்கும் இப்போட்டியில் விராட் கோலி, பாபர் அசாம், பும்ரா, ஷாஹீன் அப்ரிடி போன்ற மகத்தான வீரர்களை கொண்ட ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகள் இப்போட்டியில் மோதுவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒருநாள் போட்டிகளாக நடைபெற உள்ள நிலையில் இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெளிப்படுத்திய செயல்பாடுகளின் புள்ளி விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்:

1. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை மொத்தம் 132 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 73 போட்டியில் வென்று பாகிஸ்தான் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா 55 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. இருப்பினும் ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 13 தொடர்களில் 12 முறை விளையாடியுள்ள இந்தியா 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. மேலும் ஆசிய கோப்பையில் களமிறங்கிய 49 போட்டிகளில் இந்தியா 31 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மறுபுறம் 2010, 2012 ஆகிய 2 ஆசிய கோப்பைகளை மட்டுமே பாகிஸ்தான் வென்றுள்ளது. மேலும் ஆசிய கோப்பையில் களமிறங்கிய 45 போட்டிகளில் பாகிஸ்தான் 26 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

3. அது போக ஆசிய கோப்பை வரலாற்றில் நேருக்கு நேர் மோதிய 13 போட்டிகளில் இந்தியா 7 வெற்றிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. மேலும் இப்போட்டி நடைபெறும் இலங்கை மண்ணில் இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அத்துடன் ஒட்டுமொத்தமாக கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளையும் பாகிஸ்தான் 1 வெற்றியும் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

அதிக ரன்கள், விக்கெட்கள்:
1. ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (69 போட்டிகளில் 2526 ரன்கள்) முதலிடத்தில் சொல்கிறார். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள் (5) அடித்த இந்திய வீரராகவும் சச்சின் சாதனை படைத்துள்ள நிலையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக விராட் கோலி (183, 2012 ஆசிய கோப்பை தொடரில்) சாதனை படைத்துள்ளார்.

2. இருப்பினும் ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (7 போட்டிகளில் 367 ரன்கள்) அடித்த இந்திய வீரராக தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார்.

- Advertisement -

3. அதே போல ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களாக ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே மற்றும் ஜவகள் ஸ்ரீநாத் (தலா 54 விக்கெட்கள்) ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். மேலும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக சௌரவ் கங்குலி (5/16) திகழ்கிறார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானின் பலமே அது தான், நாம அதை மதிச்சு விளையாடனும் – எதிரணிக்கு மரியாதை கொடுத்து விராட் கோலி பேட்டி

4. இருப்பினும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் (2 போட்டிகளில் 4 விக்கெட்கள்) எடுத்த இந்திய கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார்.

Advertisement