- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹாக்-ஐ டெக்னாலஜிக்கு வழி விடாத மழை.. முதல் நாள் போட்டி ரத்தான காரணத்தை பகிர்ந்த சபா கரீம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு எளிதாக தகுதி பெற அந்தத் தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுபுறம் இலங்கையில் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி சமீபத்தில் தோல்வியை சந்தித்தது.

எனவே அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இந்தியாவில் வெற்றியை பெறும் முனைப்புடன் நியூசிலாந்து களமிறங்கியுள்ளது. அதனால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்தொடர் பெங்களூரு நகரில் துவங்கியது. ஆனால் தற்போது கர்நாடகா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.

- Advertisement -

வழி விடாத மழை:

அதன் காரணமாக பெங்களூரு நகரில் நேற்று முதலே மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து இந்தப் போட்டியில் டாஸ் வீசவிடாமல் காலையிலேயே மழை பெய்தது. இருப்பினும் நண்பகலுக்கு பின் மழை ஒதுங்கியதால் போட்டி துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அதனால் 2 மணிக்கு மேல் போட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மதியம் 2.45 மணிக்கு இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

குறிப்பாக பெங்களூரு மைதானத்தில் மழை நீரை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றக்கூடிய நவீன வசதிகள் உள்ளன. அதனால் மழை நின்றதும் தண்ணீர் கிட்டத்தட்ட முழுமையாக வெளியேற்றப்பட்டது. இருப்பினும் ஹக்-ஐ டெக்னாலஜியை நிறுவ தாமதமாவதால் ஆட்டம் முன்னதாகவே ரத்து செய்யப்பட்டதாக முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் தெரிவித்தார்.

- Advertisement -

விளக்கிய சபா கரீம்:

அதாவது நவீன கிரிக்கெட்டில் அம்பயர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசலனை செய்யும் டிஆர்எஸ் விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்த போட்டி துவங்குவதற்கு முந்தைய நாள் பிட்ச், ஸ்டம்ப் பகுதிகளில் ஹாக்-ஐ டெக்னாலஜி நிறுவப்படுவது வழக்கமாகும். ஏனெனில் அதை நிறுவினால் தான் டிஆர்எஸ் பயன்படுத்தி நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்து பார்க்க முடியும்.

இதையும் படிங்க: 2.30 மணி காத்திருந்து கைவிடப்பட்ட முதல்நாள் ஆட்டம்.. இரண்டாவது நாளாவது போட்டி நடைபெறுமா? – விவரம் இதோ

பொதுவாக ஹாக்-ஐ டெக்னாலஜியை நிறுவுவதற்கு ஒன்றரை மணி நேரம் முழுமையாக தேவைப்படும். ஆனால் பெங்களூருவில் நேற்று முதலே மழை பெய்ததால் மதியம் வரை பிட்ச் மேலே மூடப்பட்டிருந்த தார்ப்பாய் மட்டும் நீக்கப்படவில்லை. அதனால் 2.45 மணிக்கு மேலே ஹாக்-ஐ டெக்னாலஜியை நிறுவத் துவங்கினால் மேற்கொண்டு ஒன்றரை மணி நேரங்களாகும். அதற்குள் முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவுக்கு வந்து விடும். அதனாலேயே 2 மணிக்கு மேலே போட்டு துவங்குவதற்கான சூழ்நிலை உருவாகியும் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக சபா கரீம் விளக்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -