- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்தில் ரோஹித், கோலியுடன் இந்தியா களமிறங்கும் 2 புதிய தொடர்.. அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி தற்போது மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து மண்ணிலேயே இந்தியா விளையாடும் 2 புதிய தொடர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி முதலாவதாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியது.

- Advertisement -

2 புதிய தொடர்கள்:

அந்த உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் நோக்கத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் நோக்கத்தில் அத்தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

அந்தத் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க உள்ளனர். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர்கள் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார்கள். எனவே இனிமேல் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்கள்.

- Advertisement -

அட்டவணை வெளியீடு:

அந்த வகையில் இனிமேல் குறைவாக மட்டுமே விளையாடப்போகும் அவர்கள் ஜூலை மாதம் இந்தியாவுக்காக விளையாடப் போவதை ரசிகர்கள் பார்த்து மகிழலாம். இந்தியா – இங்கிலாந்து தொடருக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள அட்டவணை பின்வருமாறு (இந்திய நேரம்):
முதல் டி20: ஜூலை 1, இரவு 11 மணி, டுர்ஹாம்
2வது டி20: ஜூலை 4, இரவு 7 மணி, மான்செஸ்டர்

இதையும் படிங்க: 358 ரன்ஸ்.. காயத்துடன் தோனி, ரோஹித்தின் சாதனைகளை தூளாக்கிய ரிஷப் பண்ட்.. இங்கிலாந்தில் புதிய உலக சாதனை

3வது டி20: ஜூலை 7, இரவு 11 மணி, நாட்டிங்காம்
4வது டி20: ஜூலை 9, இரவு 11 மணி, பிரிஸ்டோல்
5வது டி20: ஜூலை 11, இரவு 11 மணி, சௌதம்டன்
முதல் ஒன்டே: ஜூலை 14, மாலை 5.30 மணி, பர்மிங்காம்
2வது ஒன்டே: ஜூலை 16, மாலை 5.30 மணி, ஃகார்டிப்
3வது ஒன்டே: ஜூலை 19, மதியம் 3.30 மணி, லார்ட்ஸ், லண்டன்

- Advertisement -